பொய் அல்ல கற்பனை – ஓவியர் சந்ரு

ஓவியம்: ஓவியர் சந்ரு

முப்பது வருடங்களுக்கு முன்பு புரசைவாக்கம் கல்யாண மண்டபத்தில் லீலா கணபதி மேடத்தின் மகன் கல்யாணம். அங்கு  ஆசிரியர்கள் முனுசாமி, அல்போன்சோ இருவரையும் ஒருங்கே சந்தித்து நமது குடும்பசகிதம் வணக்கம் வைத்தோம்.

ஆசிரியர் முனுசாமி “சந்ரு… உனக்கு ஒரு கல்யாணம், மனைவி, நான்கு பிள்ளைகள் இது எங்கள் கற்பனையிலும் இல்லாதது. அம்மா இதை உனக்குச் சொல்கிறோம், கல்லூரியில் இவர் யாருக்கும் அடங்கமாட்டார். ஆகவே கடவுள் இவருக்கு மூன்று பெண் பிள்ளைகளைக் கொடுத்திருக்கிறார்.” என்றார். நமக்குள் ஒரு குரல் ‘அடங்காமை – கலை’ என்றது, அவர்களிடமிருந்து விடைபெற்றோம். அன்று எமது பிள்ளைகள் எந்தப் பள்ளியில், வகுப்பில் படிக்கிறார்கள் என நண்பர்கள் கேட்டால் நாம் சற்றுப் பொறுங்கள் எனப் பிள்ளைகளிடம் கேட்டுப் பதில் சொல்வோம். இன்று எமது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் எனக் கேட்டால் யாரையும் கேட்காமல் நமக்குப் பத்துப் பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள் எனப் பதில் சொல்வோம், இவ்வளவே நமது இல்லறப் பங்கு.

குருவனத்தில் நம்மைக் காண வந்தவர்களில் ஒரு நண்பர் “கவின் கலைப் படைப்புகளில் சிறந்த ரசனைக்கு உரியவை மனித உருவங்கள் என்றார் ஒரு கலைஞர்.”

நாம், “ஆமாம், நாய் படம் வரைந்து நாய் ரசிக்கிறது.”

நண்பர் “கலை, இலக்கியப் படைப்புகளின் சிறப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

நாம், “‘வினாக்களில் சர்ப்பமாக, இருதயத்தில் புறாவாக இருங்கள்’ என்கிறது புதிய ஏற்பாடு.”

மாணவன். “குருவனத்தில் தங்கி டிராயிங் படிக்க வந்தேன். குறிப்பாக, ஸ்டோரிபோர்டு, காமிக்ஸ், அனிமேசன் சார்ந்த படங்கள்.”

நாம் “இரயில் நிலையத்தில், இரயிலுக்குள் அமர்ந்திருப்போர், சாலைகளில், நடப்போர் மற்றும் அறைகளில் படுத்திருப்போர் என நீ வரைந்த படங்கள் சிறப்பாக இருக்கின்றன. நீ எதிர்பார்க்கும் கலை அனுபவம் என்னிடம் இருக்கிறதா, இருப்பின் அவற்றை நீ முழுமனதோடு கற்றுக்கொள்ள விரும்புகிறாயா என்பதல்ல விசயம். அரசு மற்றும் பிற தனியார் கவின்கலைக் கல்லூரியல்ல குருவனம். நீ இங்கு தங்கலாம், சாப்பிடலாம்,  தாமிரபரணி ஆற்றில் குளிக்கலாம், பாறைகளில் படுத்துறங்கலாம். மேலும் இங்கு சமையல் செய்தல்,  மரம் நடுதல், கலைஎடுத்தல், செடி, கொடி, இலை, பூ, காய், புழு, பூச்சி, வண்டுகளைப் பூதக் கண்ணாடி வழி  விரிந்த காட்சிகளாகப் படம் வரைதல் எனப் பல வேலைகள் செய்யலாம்.”

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!