வீட்டிற்கு வெளியே அமர்ந்து அன்றைய செய்தித்தாளை வாசித்துக்கொண்டிருந்தேன். தினமும் காலை சரியாக ஆறு மணிக்கு அவ்வழியே வேலைக்குச் செல்லும் மாரித்தாயி அன்றைக்கும் அவ்வழியே சென்றுகொண்டிருந்தாள். அப்படிச் செல்லும்போதெல்லாம், ‘என்ன டீச்சர், டீ குடிச்சிட்டியா? பேப்பர் படிக்கியா? ஒடம்பு பரவாயில்லையா?’ இப்படி ஏதாவதொன்றைக் கேட்டுக்கொண்டே வேகவேகமாக நடப்பாள். நானும் தினமும் அவளது வழக்கமான கேள்விகளுக்கு வழக்கமான பதிலைச் சொல்லிவிட்டுச் செய்திகளில் மூழ்கிவிடுவேன். ஆனால் இன்று அதிசயமாக அவள் என்னிடம் எதுவுமே கேட்காமல் என்னைக் கடந்து சென்றுவிட்டாள். எனக்கு இது பெரிய யோசனையாக இருந்தது. அவளுக்குச் சுகமில்லையோ என்னவோ என்றெண்ணினேன். அவளை எப்போதும் கலகலப்பாகவே பார்த்துப் பழகிவிட்ட எனக்கு இது என்னவோ வித்தியாசமாகத் தெரிந்தது.
மாரித்தாயிக்கு ஐம்பது வயது இருக்கலாம். குள்ளமான உருவம். அவள் எப்போதுமே வேகமாக நடப்பதால் எப்போமே அவள் உருண்டுகொண்டு செல்வது போலவே இருக்கும். அவளுக்கு அகன்ற பெரிய நெற்றி. அதில் ஒரு சிறிய கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு. அவளிடம் ஒருநாள் ஏன் கறுப்புப் பொட்டு வைக்கிறாய்; வேறு நிறம் பிடிக்காதா என்று கேட்டதற்கு,
“நானே கறுப்பு. இந்தக் கறுப்பு மூஞ்சிலே கறுப்புப் பொட்டு வைக்கவே பிடிக்காதுதான். என்ன பண்றது. ஏ வீட்டுக்காரன் செத்த பெறகு பொட்டே வைக்கக் கூடாதும்பாங்க. அதுனால இந்த இத்தினிக்கானு கறுப்பு ஸ்டிக்கர சும்மா வச்சுக்கிறேன். கலரு பொட்டு வச்சா இங்க இருக்கிற பொம்பளைகளே புருசன் செத்த பெறகு பொட்டப் பாருன்னு அப்பிடி பேசுவாளுக. எதுக்கு வம்புன்னுதான் கறுப்புப் பொட்டையே வச்சிருக்கேன். கறுப்புன்னா ஒண்ணுஞ் சொல்லமாட்டாளுக. அதுலயும் ஏ மூஞ்சி இருக்கிற கறுப்புக்கு நானு வச்சிருக்குற பொட்டு எங்க வெளிய தெரியப் போகுது. சும்மா பேருக்கு ஒரு பொட்டு. சின்னதுலருந்தே பொட்டு வச்சு பாத்த நெத்திய இப்ப வெறும் நெத்தியாப் பாக்குறதுக்கு எப்பிடியோ இருக்குது. அதுக்குத்தான். ஆனாலும் என்னோட பெரிய நெத்திக்குப் பெரிய பொட்டுத்தான் எடுப்பா இருக்கும். என்ன செய்ய? அதுக்குத்தான் குடுப்பன இல்லையே’’
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then