ஒவ்வொரு சமூகமும் தங்களை எத்தகைய பெயரால் அழைக்கவேண்டும் என்றும் எத்தகைய பெயரால் அழைக்கக் கூடாது என்றும் திட்டவட்டமான வரையறை வைத்துள்ளது. இதற்காகப் பல்வேறு போராட்டங்களும் வெவ்வேறு அரசியல் முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பட்டியல் சமூகமோ, தங்களுக்குரிய பெயரைச் சூட்டுவதற்கே பெரும் போராட்டம் செய்யவேண்டிய இழிநிலையைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது.
ஆங்கில அரசு கொடுத்த Depressed Classes என்ற ஆங்கிலச் சொல்லினை அரசியல் தலைவர்கள் ‘ஒடுக்கப்பட்ட வகுப்பினர் / தாழ்த்தப்பட்ட வகுப்பினர் / அழுத்தப்பட்ட வகுப்பினர்’ என்று அந்தக் காலத்தில் பயன்படுத்தியுள்ளனர். Depressed Classes என்ற பெயரிலிருந்து தற்போது பள்ளியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் பயன்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டோர் என்ற சொல் வரை இச்சமூகம் ஆற்றிய எதிர்வினையை வைத்து நாம் புரிந்துகொள்ளலாம்.
Depressed Classes என்ற சொல்லுக்கு இணையான சொல்லாகத் தலித் (Dalit) என்ற சொல்லையே பட்டியல் சமூகத் தலைவர்கள் தாங்கள் உருவாக்கிய கட்சிகளின் பெயர்களில் பயன்படுத்தியுள்ளனர். தமிழகம் மட்டுமல்லாமல் அகமதாபாத், பம்பாய், மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற பகுதிகளில் தொடங்கப்பட்ட சில பட்டியல் இனக் கட்சிகளின் பெயர் பட்டியல் Depressed Classes என்ற பதத்தில் மக்களின் விருப்பமின்மையையே காட்டுகிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then