“அடையாள அரசியலின் இறுதி லட்சியம் அடையாளத்தை உதிர்ப்பதுதான்”

- எஸ்.ஜே .சிவசங்கர் | பச்சோந்தி

பின் தலித்தியக் கோட்பாட்டின் மூல முன்மாதிரி (Prototyper)யாகத் திகழ்பவர் எஸ்.ஜே.சிவசங்கர். படைப்புக்கும் கோட்பாட்டுக்குமான உறவு சன்னமாக மாறிவரும் சூழலில் இரண்டையும் இணைக்கும் இணைகோடாய் இயங்கிவருபவர்.`கடந்தைக் கூடும் கயாஸ் தியரியும்’, `சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளை எழுதியுள்ளார். மாய யதார்த்தம், கற்பனாவாதம், பின் தலித்தியம் உட்பட பல கோட்பாட்டுத் தளங்களைப் புனைவாக்கும் பரிட்சார்த்தங்களைச் செய்து பார்ப்பவர்.

திருச்சாணரத்து மலையின் சமணப் பள்ளியில் பயின்ற ‘யாஒ’ என்கிற ஆசானுக்கும் ‘யாஅ’ என்கிற அவரது சிஷ்யனுக்கும் இடையே நடைபெற்ற தத்துவார்த்த உரையாடலே ‘யா-ஒ மறைக்கப்பட்ட மார்க்கம் என்கிற நூல். வழக்கமான துறவிகள் போலன்றி மறுப்பாளராக (Heretic), இன்பவியல் கொள்கைகொண்டவராக (Hedonic) யாஒ ஆசானை அடையாளப்படுத்தலாம். ஜென் மற்றும் சூஃபிக் கதைகளின் தன்மையில் அமைந்த இந்நூலில், சித்தரிய பரிபாஷையும் நாட்டார் வழக்காற்றியல் கூறுகளும் ஊடாடுவதோடு அன்றாட இல்லற வாழ்வின் பாடுகளையும் அலசுகின்றது. எளிய மனிதர்களின் சிக்கல்களில் இருந்து பெரும் தத்துவார்த்த தர்க்கத்துக்குள் இக்கதையாடல்கள் நகர்ந்து செல்கின்றன. இத்தொகுப்பிற்காக வரையப்பட்ட திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் ஓவியங்கள் தனித்த உரையாடலை நிகழ்த்தக்கூடியவை.

‘இது கறுப்பர்களின் காலம்’ என்னும் கவிதை நூல் ஆப்பிரிக்கப் பெண் கவிதைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி. கொண்டாட்டத்துடன் கூடிய அழகியலும் எதிர்ப்புணர்வும் மீறலும் ஒருங்கே அமைந்த இந்நூல் பரவலாக வாசிக்கவேண்டியது. இவை தவிர ‘இரங்கலும் இரங்கல் நிமித்தமும்’, ‘அர்த்தம் அபத்தம்’, ‘இடைநாழி’, ‘காத்து காத்து’ ஆகிய குறும்படங்களை இயக்கியுள்ளார். இவை வழமைக்கு மாறான (Meta film) திரை உருவாக்கமாகும். எழுத்து, காட்சி ஊடகம், படைப்பிலக்கியம், கோட்பாட்டு ஆய்வுகள், மொழிபெயர்ப்பு எனப் பன்முக ஆளுமைத்திறன்கொண்ட எழுத்தாளர் எஸ்.ஜே.சிவசங்கருடன் நீலம் இதழின் சார்பாக உரையாடினேன்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

error: Content is protected !!