இந்தக் கட்டுரை எழுதுவது எனத் தீர்மானித்தப் பின், திரும்ப எவ்வாறு நான் மறக்க நினைக்கும் நினைவுகளுக்குள் செல்வது என்ற பெரும் தயக்கம் என்னுள் எழுந்தது. பெரும்பாலும் வன்முறையை எதிர்கொண்டவர் அதனை நினைவு படுத்திச் சொல்லும் போதும் எழுதும்போதும் அதேவிதமான மன உணர்வு எழுந்து வலியை அனுபவிக்கிறார். இவ்வாறான வன்முறைக் கதைகளைக் கேட்டுச் சுகம் காணக் கூடியதாகத் தமிழ் இலக்கியச் சமூகம் இருப்பதால் எனக்குள் எழும் தயக்கம் நியாயமானதே. முன்கதைச் சுருக்கமாக எனக்கும் என் போன்றவர்களுக்கும் நடந்த சுரண்டல்களை அடுக்குவது, எனக்கு அயர்ச்சியையும் மேலும் மேலும் மனச்சிதைவை நோக்கித் தள்ளுவதாக இருப்பதாலும் அதனைத் தவிர்க்கவே விரும்புகிறேன். அதன் காரணமாகப் பல பத்திகளை எழுதிய பின்னர் அழித்துவிட்டேன். வன்முறைக் கதை கேட்பதன் வழியாகக் கிளுகிளுப்படையும் வாய்ப்பை நான் வழங்கப் போவதில்லை. இருந்தும், எல்லாவற்றையும் கடந்து மீண்டும் மீண்டும் வெவ்வேறு வழிமுறைகளில் இதனைப் பற்றி உரையாடும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டே இதனைப் பேச முயல்கிறேன். கலை இலக்கிய வெளியில் நடக்கும் வன்முறைப் பற்றி தொடர்ந்து பேசுவது இங்கு மிகவும் அவசியமானதாக இருப்பதாலும் கூடுமானவரை நான் ஒரு மற்றமையாக இருந்து இந்தச் சமூக அவலத்தை எழுதவே விரும்புகிறேன்.
புதிய மொழி
இன்று நேற்று அல்ல, நூற்றாண்டுகளாக அறிஞர்கள், கலைஞர்கள் மத்தியில் பாலியல் சுரண்டல் இருந்திருக்கிறது. கிரேக்கச் சிந்தனையாளர் சாக்ரடீஸ் தன் இளம் மாணவரான அல்சிபியடெஸ் மீதும், பிரெஞ்சு சிந்தனையாளர் அபிலாட்டிற்கும் அவரின் பருவ வயது மாணவரான ஹெலோய்ஸ்ஸுக்கும் உறவு இருந்திருக்கிறது. உண்மையிலேயே அதிகாரம் உள்ள ஒருவர் தன் கீழுள்ள மாணவரையோ பணியாளரையோ எளிதாகப் பணிய வைக்க இயலும் என்பதால் அதனைக் காதல் என்றோ இருதரப்பும் பரஸ்பர புரிதலோடு உறவில் இருந்தனர் என்றோ நியாயப்படுத்துவதற்கு இடமில்லை. பரஸ்பர புரிதலோடு ஒரு பேராசிரியரும் மாணவரும் காதல் உறவில் இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும் அது பாலியல் சுரண்டலிலும் வன்முறையிலுமே முடிகிறது என்பதால் இதனைப் பொதுப் பிரச்சினையாக உணர்ந்த ஐரோப்பிய, அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்களும் மாணவர்களும் தனிப்பட்ட உறவு வைத்துக்கொள்வதை விவாதத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது.
இதன் பொருட்டு, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து பல்கலைக் கழகங்கள் தங்களின் கொள்கைகளை மாற்றியமைத்ததன் விளைவாக ஒரு பேராசிரியருடன் மன சம்மதத்துடன் உறவில் இருப்பதையே கல்வி நிறுவனங்கள் தடை செய்திருக்கின்றன. இவ்வாறான அணுகுமுறையானது உறவு பற்றிய புதிய மொழியின் வருகையைக் காட்டுகிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then