1
நோய் பரவிக்கொண்டிருந்த வெப்ப மண்டல நகரத்தின் வேனிற்கால இரவு ஒன்றில் உன்னைப் பற்றியதான கனவின் பாதியில் அவன் விழித்தெழுந்தான்.
உனது முத்தங்களின் நறுமணத்தையும், உரையாடலின் சுகந்தத்தையும், உனது பழுப்பு நிற யோனியின் உப்புச் சுவை நிறைந்த வாசனையையும், இரவுகளை நிரப்பிய காதலின் நறவையும், நேசத்தின் மிச்சங்களைப் பதுக்கி வைத்திருக்கும் கருமயிர் நிரம்பிய உனது அக்குளின் நறுமணத்தையும், நீ இல்லாத வெற்றிடம் உருவாக்கிய அமில நாற்றத்தையும் மீட்டெடுத்த ஊமத்தையின் வாசம் நிரம்பிய அக்கனா,
நகரம் முழுவதையும் ஆக்கிரமித்திருக்கும் மரண ஓலங்களுக்கு மத்தியிலும் உன்னை அவனுக்கு மீட்டுக் கொடுத்தது. இருப்பின் துர்நாற்றம் வீசும் மனிதர்களின் உலகில், அனைத்தும் ‘வாசனையின்’ வழி இயங்குவதாய் அவன் நம்பினான்.
உன்னைப் பற்றியே சில நாட்களாய் அவன் சிந்தித்துக்கொண்டிருக்கிறான் – குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், சென்ற செவ்வாய்க்கிழமை முதல் அவனது சிந்தனை உன்னையே சுழன்றுகொண்டிருக்கிறது.
இருபத்தெட்டு நாட்களாய் வெளிர்நிற ஆலிவ் பச்சை வர்ணம் பூசப்பட்ட சுவர்களுக்குள் இருந்தபடி, சாளரம் வழியாக வெறிச்சோடிய தெருவைக் காலை முதல் அந்தி வரை வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பதிலேயே கழியும் அவனது காலத்தில், அமிக்டாலாவும் ஹிப்போகாம்பஸும் முப்பத்து மூன்று வருடங்களாகச் சேமித்து வைத்திருந்த நினைவுகள் அனைத்தையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதில் ஆச்சரியப்பட எதுவும் இருக்கவில்லை.
ஒருவேளை தான் சிறையில் நீண்ட காலம் இருக்க நேர்ந்தால், நினைவேக்கமும் கழிவிரக்கமும் நிறைந்த தொலைக்காட்சி தொடருக்கான திரைக்கதை ஒன்றை எழுத முடியும் என்று அவன் அப்போது நம்பினான்.
அவனது முப்பத்து மூன்று வருடங்களில் ஒரு சிறு பகுதியினை நீயும் ஆக்கிரமித்திருக்கிறாய். அந்தச் சிறுபகுதியே உன்னைக் குறித்தான நினைவுகளை அவனுள் கிளறிவிட்டிருந்தது.
மீண்டும் ஒருமுறை அவன் உன்னைச் சந்திப்பானா என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. வைரஸ்களுக்கு அவன் தனது நுரையீரல் திசுக்களைத் தின்னக் கொடுக்கக் கூடும். அல்லது சோறு வாங்கப் பணமிருந்தும் சோறு கிடைக்காமல் பட்டினியால் அவன் இறக்கலாம், அல்லது ஒரு ரொட்டிக்காக யாராவது அவனைக் கொலை செய்யலாம், அல்லது ஆக்ஸிஜன் உருளைக் கிடைக்காததின் காரணமாக உயிரின் மூலக்கூறை அவன் இழக்க நேரிடலாம்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then