வரலாற்றில் சாதியின் உண்மையை மூடி மறக்கும் புனைவுப் புகையின் நெடி அதிகம். உண்மையைப் பிரித்தறிந்து சொல்ல மெனக்கெட வேண்டியிருக்கிறது. பழைமையில் நம்பிக்கை கொண்டோருக்கு இன்றைக்குப் புதியதாக முன்வைக்கப்படும் சாதி குறித்த உண்மைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தி விடுகின்றன. சாதி அமைப்பின் அபத்தம் குறித்துப் பேசும்போதெல்லாம் பழைமை மீது கட்டப்பட்டுள்ள புனைவு வரலாறும் அதன்வழி உருவாக்கம் பெற்றுள்ள பெருமிதமும் நீர்த்துப்போய்விடுமோ என்கிற கவலையின் வெளிப்பாட்டைப் பார்க்க முடிகிறது. அதனாலேயே சாதியால் பயன் பெற்றவர்களால் சாதி குறித்த பேச்சு உடனடியாகச் சர்ச்சையாக்கப்பட்டு நேர்மையான விவாதமின்றி அமுக்கப்பட்டுவிடுகிறது. அதற்காகவே சாதியால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து உண்மையைப் பேச வேண்டி யிருக்கிறது. இது நீண்டகாலமாக இருந்துவரும் தொழிற்பாடுதான். இதற்கொரு உதாரணமாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் செந்தமிழ் இதழ் கட்டுரையை ஒட்டி நிகழ்ந்த சம்பவத்தைச் சொல்லலாம்.
மு.ராகவையங்காரும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பதற்றமும்
தமிழ்நாட்டில் மதுரையை மையமிட்ட ‘அறிவுச்’ செயல்பாட்டுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லாத, நீண்ட வரலாற்றைக் கொண்ட, புனிதத்தன்மை உண்டு. அது தமிழ் மீதேறிச் சென்று பாண்டியர் வரலாற்றில் மோதி மீனாட்சியின் பாதம் பணிந்து உருண்டு புரண்டு திரிவது வழக்கம். அந்தப் ‘புனித் தன்மை’ சாதி நூல் உருவாக்கத்திலும் அதிதீவிரமான வேலையைச் செய்திருக்கிறது.
புனிதத்தன்மை பன்முகம் கொண்டது. சிறுசிறு புனிதங்கள் சேர்ந்து பெரிய புனிதங்களைப் பாதுகாக்கும். ஒரு சிறு புனிதம் மற்றொரு சிறு புனிதத்தோடு தொடர்புடையதாக இருக்கும். இந்தியாவில் புனிதங்கள் தரும் முக்கிய விளைச்சல் சாதியைக் கெட்டியாக்கி நீட்சிப்படுத்துவதாகும். இதனால் புனிதம் பற்றிக் கேள்வி எழுப்பும்போதும் புனிதத்திற்கு வேறொரு விளக்கம் சொல்லும்போதும் சாதி அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ள பலரைப் போல மதுரைத் தமிழ்ச் சங்கமும் பதற்றமடைந்திருக்கிறது. இந்தப் பதற்றத்தை இருபதாம் நூற்றாண்டில் மட்டுமல்ல. மதுரையில் பௌத்த, சமணர்கள் அழிக்கப்பட்டதில் இருந்தே பார்க்கலாம். மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் வேளாளர்கள் முக்கிய அதிகார மையமாக இருந்தார்கள். பிராமணர், நாயுடு முதலிய சமூகத்தவர்கள் சிலரும் அதில் அங்கத்தினராக இருந்தாலும் எடுக்கப்படும் முடிவுகள் ஒவ்வொன்றிலும் வேளாளர்களின் கை ஓங்கியிருந்தது. மதுரைத் தமிழ்ச்சங்கத்திற்கும் வேளாளர்களுக்குமான இந்த உறவு திடீரென உருவானது அல்ல. இரண்டு தலைமுறை வரலாற்றைக் கொண்டது. இந்தச் செய்தியை அறிந்துகொண்டால்தான் பின்னாளில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் மு.ராகவையங்காருக்கு உருவான சிக்கலைப் புரிந்துகொள்ள முடியும்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then