நந்த மன்னன் பற்றிய வழக்காற்று கதையில் அவன் மண்மாரி பொழிந்து மடிந்தான் என்றும் அரண்மனை இடிந்து அழிந்தான் என்றும் திரும்பத் திரும்பக் கூறப்படுகின்றன. அவன் இயற்கையாக அழியவில்லை என்பதே இதன் பொருள். இவ்வாறு இயற்கை அல்லாத முறையில் இறந்த நந்தனின் கதையை நத்த மேட்டுக் கதைகள் வேறு வடிவில் பிரதிபலிக்கின்றன. ஒரு சொல்லை அல்லது ஓர் எழுத்தை மாற்றிக்கொண்டு கிட்டத்தட்ட அதே கதையாடலாகவே அவை நீடிக்கின்றன. அதாவது நத்த, ரத்த என்ற இரண்டு சொற்களும் ஒரே பொருளில் கையாளப்படுவதை நாம் பார்க்கலாம். ரத்தம் என்ற சொல்லையே நத்தம் என்பதற்கான மாற்றுச் சொல்லாக மக்கள் குறிப்பிடுகின்றனர். இவ்விரண்டு சொற்களும் ஒன்றுக்கு மற்றொன்று மாற்றாகக் கையாளப்படுகிறது. இப்போதும் கிராமப்புறங்களில் பேச்சு வழக்கில் “ரத்தம் வருகிறது” என்பதை “நத்தம் வருகிறது” என்று சொல்வதைப் பார்க்கிறோம். ரத்தம் என்பது அழிவோடு தொடர்புடையது. இந்தப் புரிதலோடு உள்ளூர் கதையாடல்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
1) சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தியாகனூர் என்னும் இடத்தில் இரண்டு புத்தர் சிலைகள் உண்டு என்பது பலரும் அறிந்த செய்தியே. முதல் சிலை சாலையோரம் இருக்கிறது. காடாகவும் மேடாகவும் இருந்த இடத்தில் இச்சிலை கிடந்திருக்கிறது. பிறகு, அதே இடத்தில் அச்சிலையை வைத்து இப்போது கோபுரம் எழுப்பப்பட்டிருக்கிறது. கட்டடம் பிந்தையது, சிலை முந்தையது. புத்தரை அப்பகுதி மக்கள் கொங்கு சித்தர் என்று உள்ளூர் பெயரில் அழைக்கிறார்கள். மற்றொரு புத்தர் சிலையை, சாலையிலிருந்து உள்ளே சென்றால் பார்க்கலாம். ஊரிலேயே ஆலமுத்து அய்யனாரின் கோயிலொன்றும் இருக்கிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then