10
இன்றைக்கு அறியப்படும் நந்தனார் கதை தோன்றிப் பரவிய விதத்தை இதுவரையிலும் பார்த்தோம். முந்தைய சைவப் பிரதிகளில் நந்தனார் கதைக்கான மூலங்கள் இருந்திருந்தாலும் இன்றைக்கு அறியப்படும் நந்தனாருக்கான ஆதாரம் கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிய ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’தான். 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான் இக்கீர்த்தனை பாடப்பட்டது. இதற்குப் பிறகுதான் நந்தனார் பற்றிய பிரதிகள் பல்வேறு வடிவங்களில் வெளியாயின. குறிப்பாக, தமிழ்நாட்டின் சமூக அரசியல் பண்பாட்டு வெளிகளில் நந்தனார் ஓர் அடையாளமாக நிலைபெற்று, பரவலானது. இந்தப் பரவலாக்கத்தின் ஊடாகத்தான் நந்தனார் கதை ‘வரலாறானது’ என்பதையும் பார்த்தோம். இனி ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ எழுதப்பட்டதற்குப் பின்னால் சென்று பார்க்கவிருக்கிறோம். தமிழ் வரலாற்றில் நந்தன் அல்லது நந்தனார் என்ற பெயரும், அப்பெயரால் குறிப்பிடப்படும் நபரும் எங்கெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறார், அங்கெல்லாம் அவரின் தகுதி என்னவாக இருந்திருக்கிறது என்பவற்றைத் தொகுத்துக்கொள்ளவிருக்கிறோம்.
தமிழில் பழையதாக, அதனால் தொடக்கமானதாக அறியப்படும் சங்கப் பாடல்களிலிருந்து இந்தத் தேடலை ஆரம்பிக்கலாம். சங்கப் பாடல்களில் பிற்கால நூல்களாகக் கருதப்படும் கலித்தொகை, பரிபாடல் போன்றவற்றில் நந்தன் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. மாறாக, பத்துப்பாட்டு நூல்களைத் தவிர்த்த தொகை நூல்களான அகநானூறு, குறுந்தொகை, புறநானூறு ஆகியவற்றில் குறிப்புகள் கிடைக்கின்றன. முக்கியமாக, நந்தன் என்னும் பெயரும், அவன் மன்னனாக இருந்தவன் என்பதற்கான குறிப்பும் நேரடியாக இடம்பெற்றுள்ளன.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then