பாலியல் அத்துமீறல் குறித்த திரைப்படங்கள் -பிரதீப் பாலு

சில மாதங்களுக்கு முன்பு, சென்னைப் புறநகர்ப் பகுதியில் பிரசித்தி பெற்றவொரு திரையரங்கத்தில் நான்கு திரைப்படங்கள் வெளியாகின. அந்தத் திரையரங்கத்தின் போஸ்டர்கள் அடங்கிய புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது. அவை சராசரியான திரைப்படங்களாக இருக்கவில்லை. பெண்களை முன்னணிக் கதாபாத்திரங்களாகக் கொண்டிருந்த திரைப்படங்கள். இதுகாறும் அவ்வப்போதே பெண்களை மையமாகக் கொண்ட படங்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் ஒரே நாளில் நான்கு பெண் மையத் திரைப்படங்கள் வெளியானது பலருக்கு ஆச்சரியத்தையும் சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தின. அப்படி வெளியானாலும் அப்படங்கள் பெண் வாழ்வின் துயரநாடகங்களாக இருக்குமே தவிர, ஒரு பெண் சமூகத்தில் தனது இருப்பை வலுவாக நிறுவக் கூடிய படங்களாக இருக்காது. வெளியான அந்த நான்கு படங்களும் பெண்களைக் கதாநாயகன் பாணியில் காட்ட முயன்ற திரைப்படங்கள். இந்த மாற்றம் ஏற்பட கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த முக்கியப் போக்குகளைக் காரணங்களாகக் கூறமுடியும்.

கடந்த ஐந்து வருடக் காலத்தில் இந்தி மொழியில் வெளியான பெண் மையத் திரைப்படங்களுக்குப் பெருவாரியான இளைஞர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, அதன் தொடர்ச்சியாக மலையாள மொழியில் உருவாக்கப்பட்ட குடும்ப வன்முறை சார்ந்த திரைப்படங்கள் (இது நிகழ ஓடிடிகளின் வருகை பெரிய காரணம் என்று கூறலாம்). இதற்கு நிழல் உருவில் ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஓடிடிகள் பாலியல் உணர்வு மற்றும் பெண்மை குறித்து இந்தியப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்த பிறநாட்டுத் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள். இவை யாவும் இந்தியப் பார்வையாளர் பரப்புக்குள் பெண்கள் குறித்த கதைகளுக்கெனவொரு பிரத்யேகத் திரைச் சந்தை உருவாகியிருப்பதற்கான அறிகுறிகளாக விளங்கின. இதை உணர்ந்திருந்த ஓடிடிகள் பல இந்திய மொழிகளிலும் பெண்களையும், அவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் ஆவணப்படுத்தும் முயற்சியாகப் பல்வேறு பெண்மையப் படங்களைத் தயாரிக்க முன்வந்தன. அத்தகைய கதைகளின் முக்கியக் கருப்பொருளாக பாலியல் அத்துமீறலுக்கு உள்ளான பெண்கள் /குழந்தைகள் கதாபாத்திரங்கள் விளங்குகின்றன.

பாலியல் அத்துமீறல் குறித்த திரைப்படங்களின் வருகைக்குச் சில ஆண்டுகள் முன்பே (நிர்பயா சம்பவத்திற்குப் பிறகு) பாலியல் வன்கொடுமை சார்ந்த பல உரையாடல்கள் இணையத்தில் நடந்த வண்ணமிருந்தன. இவற்றை நீடிக்கச் செய்யும் விதமாக இந்தியாவின் பல பகுதிகளிலும் நிகழ்ந்துவரும் பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து இணையதளக் கவனத்தைப் பெற்றுவருகின்றன. இந்த உரையாடல்களின் விளைவாகவும், ஆண்களுக்கு இணையாக பெண்களின் இணையதள/ஓடிடி பயன்பாடு அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளதாலும், பெண்கள் குறித்த திரைப்படங்களுக்கு (குறிப்பாகப் பாலியல் அத்துமீறலை மையமாகக் கொண்டிருக்கும் திரைப்படங்களுக்கு) இன்று அதிக வரவேற்பு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படங்கள் குறித்த உரையாடல்கள் பலவும் திரையரங்கில் வெளியான காலத்தைக் காட்டிலும், அவை ஓடிடிகளில் வெளியாகும்போதோ அல்லது ஓடிடிகளில் மறுவெளியீடு செய்யப்படும்போதோதான் அதிகம் உருவாகின. இந்தச் சமீபத்திய போக்கில், இக்கதைகளை ஓடிடிகள் வெறும் திரைச் சுவாரசியம் கருதி தயாரிக்க/விநியோகிக்க முன்வருகின்றனவா? பாலியல் பாதிப்புக்கு உள்ளானவர்களின் பாதிப்படைந்த உலகம் இத்திரைப்படங்களில் நியாயமாகப் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றனவா?

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!