நந்தா விளக்கு : என்.வி.ஜெயசீலன் – அருள் முத்துக்குமரன்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கீழ்கவரப்பட்டு கிராமத்தில் 1947ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி மிராசுதாரர் வாசுதேவன் – பார்வதி அம்மாள் தம்பதியருக்கு முதல் மகனாகப் பிறந்தவர் என்.வி.ஜெயசீலன். தொடக்கக் கல்வியைத் டி.எம். கிருத்துவத் துவக்கப் பள்ளியில் பயின்றார். மேல்நிலைக் கல்வியை 1958இல் காட்டுமன்னார் கோவிலிலுள்ள பர்வதராஜகுல மேல்நிலைப் பள்ளியில், உறவினர் வீட்டில் தங்கிப் பயின்றார். அதனைத் தொடர்ந்து 1960ஆம் ஆண்டு கடலூர் மஞ்சக்குப்பத்தில் கர்னல் தோட்டத்தில் அமைந்துள்ள ஜெயின் ஜோசப் காலேஜ் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். அங்கு படிக்கும்போது  மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற ஓவியப் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றார். ஹாக்கி, கால்பந்து, கூடைப்பந்து, கபடி போன்ற விளையாட்டுகளிலும் மிகுந்த ஆர்வமுள்ளவராக விளங்கியவர், அவ்வணிகளின் தலைவராக இருந்து சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்திருக்கிறார்.

சிறு வயது முதலே சமூகச் சீர்திருத்தப் பணிகளிலும் அரசியலிலும் ஆர்வமாக இருந்ததின் காரணமாகத் தன்னுடைய 22ஆம் வயதில் இந்தியக் குடியரசுக் கட்சியில் இணைந்தார். முதலில் கடலூர் பகுதி வட்டப் பொருளாளராக இருந்து, படிப்படியாக முன்னேறி மாவட்டச் செயலாளர், இறுதியாக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றுச் சிறப்பாகச் செயலாற்றியிருக்கிறார்.

அரசியல் பின்புலம்

தலித் கிருத்துவர் ஆபிரகாம் என்பவர் கீழ்கவரப்பட்டு கிராமத்திலிருந்து நெல்லிக்குப்பம், பட்டாம்பாக்கம் பகுதிகளுக்குச் சென்று மண்ணெண்ணெய் வியாபாரம் செய்துவந்தார். ஆப்ரகாம் கிருத்துவ மதத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். அதன் வாயிலாக டென்மார்க்கிலிருந்து நெல்லிக்குப்பம் வந்திருந்த மிஷினரியைச் சார்ந்த ‘லாங்கே துரை’ என்பவரைச் சந்தித்துத் தன் கிராமத்து நிலையை எடுத்துக் கூறி, கீழ்கவரப்பட்டு கிராமத்திற்கு ஒரு பள்ளிக்கூடம் வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு இசைந்த லாங்கே துரை கீழ்கவரப்பட்டில் உள்ள தலித் மக்களை நேரடியாகச் சந்தித்து அம்மக்களின் நிலையை உணர்ந்து, ஆற்காடு லுத்ரன் சபை (ஏ.எல்.சி) கிருத்துவ சபையின் மூலம் ‘டேனிஷ் மிஷன் துவக்கப் பள்ளிக்கூடம்’ உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டார். ஆனால், பள்ளிக்கூடம் கட்டுவதற்கு யாரும் இடம் தராத காரணத்தால் மிஷனரி மூலமும் லாங்கே துரையின் பெரும் முயற்சியாலும் 1905இல் கு.நாராயணசாமி பூசாரி என்பவரின் வீட்டில் ஆரம்பப் பள்ளியைத் துவக்கி அந்த வீட்டிலேயே பள்ளிக்கூடம் நடத்தப்பட்டுப் பின்னாட்களில் ஆனாங்கொட்டை என்ற பகுதியில் ஏ.எல்.சி கிருத்துவச் சபையின் மூலம் நிரந்தரக் கல்விக்கூடம் கட்டப்பட்டது. அதன்பிறகு எந்தத் தடையுமின்றிப் பட்டியல் சமூகக் குழந்தைகள் கல்வி பயின்றனர். டி.எம்.கிருத்துவப் பள்ளிக்கூடம் கீழ்கவரப்பட்டு கிராம மக்களுக்கு மட்டுமல்லாமல் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களான மேல்கவரப்பட்டு, ஆண்டிப்பாளையம், கோழிப்பாக்கம், வடக்குப் பாளையம், சாலைக்காலனி, தட்டாம்பாளையம், பகண்டை, குமாரமங்கலம், மாளிகைமேடு, திருவதிகை, தராசு போன்ற பல கிராமத்து மாணவர்களும் எளிதில் கல்வி கிடைக்க வழிவகை செய்தது. சுதந்திரத்திற்கு முன்பே கல்வியில் தன்னிறைவு பெற்ற கிராமமாகக் கீழ்கவரப்பட்டு உருவெடுத்திருந்தது. கிராமமே கல்வியில் முன்னேறியிருந்ததால் என்.வி.ஜெயசீலனின் குடும்பமும் சமூக விழிப்புணர்வு பெற்ற குடும்பமாக இருந்தது. அதுவே என்.வி.ஜெயசீலன் அரசியல்  நடவடிக்கைகளில் ஈடுபடக்  காரணமாக அமைந்தது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!