புத்துயிர் பெறுவது எப்போது? – இலஞ்சி அ.கண்ணன்

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதற்கிணங்க, கடந்த ஆட்சியில் நிகழ்ந்த பட்டியல் சாதியினர் மீதான அடக்குமுறைகளும் தீண்டாமைக் கொடுமைகளும் இன்றைய திமுக ஆட்சியிலும் அரங்கேறிய வண்ணமாகவே இருக்கிறது. ’சொல்லாததையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம்’ என்ற முதல்வர் ஸ்டாலினின் இவ்வாக்கியத்திற்கு விடை தெரியவில்லை. அதன் விளைவாகவே, பள்ளிகளில் இருந்து பல்கலைக்கழகங்கள் வரையிலும் பிற்போக்குத்தனமான சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஆசிரியர்களும் பேராசிரியர்களும் கடைபிடிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இதைத்தான் கடந்த மாதம் 14ஆம் தேதியன்று, தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகாவிற்குட்பட்ட அரியநாயகிபுரத்தில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் இந்து நாடார் உறவின் முறைக்குப் பாத்தியப்பட்ட  பள்ளியில் பணிசெய்யும் சுயசாதி வெறி பிடித்த ஆசிரியர்களாலும் பள்ளியின் நிர்வாகத்தினராலும் தொடர்ந்து சாதியத் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளான, மாணவன் சீனுவின் மர்மமான மரணமும் உணர்த்துகிறது.

இந்நூற்றாண்டிலும் சாதியக் கொடுமைகளுக்கு உள்ளாக்குவதன் மூலம் பட்டியலின மக்களின் மனங்களில் பாதுகாப்பற்ற உணர்வைத்தான் மீண்டும் மீண்டும் ஆட்சி புரிபவர்கள் ஏற்படுத்துகிறார்களேயொழிய, தங்களை நம்பி வாக்களித்த அம்மக்களுக்குப் பாதுகாப்பரணாக இருக்க வேண்டுமென்பதை மறந்தே செயல்படுகிறார்கள். இதைத்தான் சனாதனம் என்கிறோம். இன்றைய சூழலில் இந்து மதம் பெரும்பான்மை மதமாக இருக்கிறதென்றால் அதற்கு இந்து மதத்தால் தீண்டாமைக் கொடுமைகளுக்குள்ளாக்கப்படுகின்ற அட்டவணைச் சாதியைச் சார்ந்த மக்கள் அம்மதத்தின் அங்கமாய் இருப்பதே முக்கியக் காரணமாகும். மேலும், பூனா ஒப்பந்தத்தில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி கபட நாடகம் ஆடாமல் இருந்திருந்தால், 1932 முதலே இந்து மதம் தனது பெரும்பான்மைத் தன்மையை இழந்திருக்கும். அட்டவணைச் சமூக மக்களும் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமூகங்களைப் போன்று சிறுபான்மைச் சமூக மக்களாக மாறியிருப்பார்கள். அதேவேளையில், தங்களுடைய பிரதிநிதிகளைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் அரசியல் உரிமையையும் பெற்றிருப்பார்கள், அதன்மூலம் அரசியல் அதிகாரத்தையும்  அடைந்து பொருளாதாரத்திலும் ஓரளவு முன்னேறியிருப்பார்கள். ஆனால், ‘மகாத்மா’ காந்திக்கு இந்து மதத்தின் மீதிருந்த அதீதப் பற்றின் காரணமாக அது நிறைவேறாமல் போய்விட்டது.

சமூகநீதியைப் பேசுபவர்களும் சனாதனவாதிகளைப் போல அட்டவணைச் சமூக மக்கள் மீது சாதிய வன்மத்தை வெளிப்படுத்தும் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும். இந்தப் பிற்போக்குத்தனமான சிந்தனை கொண்ட அமைச்சர்களின் சாதியப் பேச்சுகளைக் கட்சியின் தலைமை கண்டிக்க வேண்டும், அதுதான் சமூக நீதிக்கும் அழகு. உத்தரப்பிரதேசத்தை ஆளுகிற யோகி ஆதித்யநாத்திற்கும் தமிழகத்தை ஆளுகிற மு.க.ஸ்டாலினுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என்பதை அக்கட்சியில் உள்ளவர்களும் கட்சியின் தலைமையும் உணர்ந்து செயல்படுவதே கட்சிக்கும் ஆட்சிக்கும் நன்மை பயக்கும். அதுவே மீண்டும் அக்கட்சி ஆட்சியில் அமர்வதற்கான வழியையும் வகுக்கும். இங்கு குறிப்பிட்டு திமுகவை நாம் விமர்சிப்பதற்கு முக்கியக் காரணம், சமூகநீதிக் கருத்துகளைத் தொடர்ந்து பேசிவரும் அவர்களே தலித் விரோதப் போக்கினையும் கடைப்பிடிப்பதுதான். அத்தகையவர்களின் சாதி ஆணவப் பேச்சுகள் பின்வருமாறு: சென்னை அன்பகத்தில் கடந்த 2020 பிப்ரவரி 14 அன்று நடந்த, கலைஞர் வாசகர் வட்டம் கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக அமைப்புச் செயலாருமான ஆர்.எஸ்.பாரதி, “மத்தியப் பிரதேசத்தில் ஒரு ஹரிஜன் கூட ஹைகோர்ட் ஜட்ஜ் கிடையாது. தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் வரதராஜனை உட்கார வைத்தார். அதற்குப் பிறகு ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த ஏழெட்டுப் பேர் ஜட்ஜாக இருந்தார்கள் என்றால், அது திராவிட இயக்கம் போட்ட  பிச்சை” என்று பேசினார். பின்னர் அதற்கு எதிர்ப்பு வலுக்கவே வருத்தம் தெரிவித்தார்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!