இரவு முடிந்துவிட்டதா? ஒருவேளை அதிகாலைக்குச் சற்று முன்னதாக இருக்கலாம். விலகிக் கிடந்த போர்வையைச் சரியாக இழுத்து மூடி இடப்பக்கமாகத் திரும்பிப் படுத்தபோது உறக்கத்திலிருந்து எழுந்தது போன்று உணர்ந்தேன். ஆம், அதை உணர்ந்தபின் தூங்கிக்கொண்டிருக்கிறோம் என்று நம்பத் தொடங்கியிருந்தேன். நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுவிட்டதா? நிஜமாகவே தூங்கத் தொடங்கிவிட்ட உணர்வு. இல்லை என்று மீண்டும். போர்வைக்கு அடியில் காற்றினால் செய்த உருவம் மேலெழும்பி வருகிறது.
உடலில் அதன் ரோமங்களின் லேசான உரசல். தோல் முடிகள் சிலிர்க்கின்றன. அடுத்த நொடி மூளைக்குள் மின்னல் அடித்தது போன்று வெளிச்சம். மூச்சு முட்டியது. அந்த உருவத்தின் கழுத்தை நெரித்து இந்நேரத்தில் என்ன வேலையெனக் கேட்க வேண்டும். அல்லது கண்ணைத் திறந்து எழுந்து அமர்ந்து பயப்பட வேண்டும். நீர் அருந்த வேண்டும். கண்கள் மட்டும் திறக்க இயலவில்லை. உடலை அசைத்து எழும்ப முடியவில்லை. உயிருள்ள உடலுக்கும் பிணத்துக்கும் இடைப்பட்ட காலம் தான் என அச்சம் மண்டைக்குள் ரசாயனத்தைப் பாய்ச்சியது. முதலில் வெண்மைத் திரவம். அடுத்து ஆவியான ஒளி. அசைதல் இருந்தது. போர்வைக்குள் அல்ல; மண்டைக்குள்.
பெண்ணின் குரல் (அ) சாயல் கொடுத்தால் உயிர் மிஞ்சும். அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்பது போல் ஒரு சிறு ஒளிக் கீற்றைக் கழுத்தில் வைத்தாள். வெண்மையான ஒளி பரவசமூட்டியது. காலத்தின் மாறுதல்கள் அதனிடம் இல்லை. மூடியிருந்த கண்களின் உட்தோல்கள் காட்டிய எதிரொலிப்பா எனத் தெரியவில்லை. “உனது வாய் வேண்டும்” என்றது. கழுத்தில் இருந்து ஒளிக்கீற்றையே வாய்க்கு மாற்றி நேர்த்தியாக ஒரு கவிஞன் போல் வாயை வெட்டித் தனியாக எடுத்தாள்.
ஒளியில் இருந்து ஆவியாக மேலே எழும்பிக் கொண்டிருந்த அவளின் அழகான கைகள் மீது என் வாய் இருந்தது. சற்று நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்த அவள் முனகத் தொடங்கியிருந்தாள். கண் கலங்கியிருந்தது. அந்தப் பகுதியில் ஆவிப்போக்குக் குறைவு. நீண்ட மௌனத்திற்குப் பிறகு வாயைப் பார்த்துப் பேசத் தொடங்கினாள். “உன்னைப் பழிவாங்கத்தான் வந்தேன். இப்போதும் அதே காதல் இருப்பதால் தான் கவர்ந்து செல்கிறேன். கோபம் குறையவில்லை. நான் யார் எனப் புரியாமல் தவிக்கிறேன். எனது அடையாளம் உன்னால் சிதைந்து விட்டது. இருப்பிற்கான எந்த அர்த்தமும் இல்லை. சண்டையிட நினைத்தேன். அதன் நீளத்தை மிகவும் குறுகியதாக்கினாய். அதேபோல் காதலும். குறுகியதாக்கியப் பின் காதல் உருவாகச் சந்தர்ப்பம் ஏது?
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then