‘மதம்’எனும் பண்பாட்டு முதலீடு (இன்குலாபின் குறுநாவலை முன்வைத்து) – ஜமாலன்

கடவுள் நம்பிக்கை அந்தரங்கத்தில் இருக்குமட்டும் பிரச்சனையில்லை. ஆனால், அதுவே மதச்சடங்குகள், மதக்கோட்பாடுகள் என்று அரங்கத்திற்கு வரும்போதுதானே பிரச்சனையே உருவாகுகிறது. எங்கே எனக்குக் கடுமையான எதிர்ப்பு வருகிறதென்றால் இரண்டு கூட்டங்களில்தான். ஒன்று ஒரு மதம் இன்னொரு மதம் மீது ஆதிக்கம் செலுத்தும்போது, மற்றையது சொந்த மதத்திற்குள்ளேயே மதத்தின் கருத்துகள் ஆதிக்கம் சார்ந்தவையாக இருக்கும்போது.”

– இன்குலாப்

இன்குலாபைக் கவிஞராக, மக்கள் பாவலராக அறிந்த அளவிற்கு ஒரு புனைகதை எழுத்தாளராக தமிழ்ச் சமூகம் அறிந்ததில்லை. அவரது எழுத்து தலித்துகள், பெண்கள், விளிம்புநிலையினர், ஒதுக்கப்பட்டவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் குறித்த ஒரு பிரதிநிதித்துவக் குரலாக அமையாமல், அவர்களாக, அவர்களது உணர்வை, எதிர்ப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஒரு திராவிடராகத் துவங்கி, மார்க்சியராகி, பெண்ணியராக, தலித்தியராக, தமிழ்த் தேசியராகப் பல பரிமாணங்களில் வளர்ந்து வந்துள்ளது அவரது படைப்பு முயற்சி. குறிப்பாக இன்று பெருகிவரும் இந்துத்துவப் பாசிசமயமாதல் குறித்துத் தொன்னூறுகளில் அவர் எழுதிய ‘மதம்’ என்ற குறுநாவல், தமிழ்ச் சமூகத்தின் ஆழ்தளத்தில் உருவாகிவரும் மதவாதத்தினை, அது எப்படி நிறுவனமயமாகிறது என்பதை வெளிப்படுத்தும் ஒரு கதையாடல். மதம் பண்பாடாக எப்படி ஒவ்வோர் உடலிற்குள்ளும் முதலீடு செய்யப்படுகிறது என்பதை இக்கதையாடலில் வெளிப்படுத்துகிறார். இன்றைக்கான பாசிச அரசியலுக்கான உடல் முதலீடுகளே பண்பாடு என்ற பெயரில் திணிக்கப் பட்டுள்ள மதங்கள் என்பதை வெளிப்படுத்துகிறது இக்குறுநாவல். ஆன்மீக பதிலீடாகத் தங்களை அறிவித்துக்கொள்ளும் மதங்கள், அரசியல் முதலீடுகளாக மாறியுள்ளன என்பது இன்றைய யதார்த்தம்.

ஒரு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடக்கும் மீனவச் சமூகத்தைச் சேர்ந்த வேலாயி என்பவரின் கொலைக்கு யார் காரணம் என்ற மர்ம முடிச்சை அவிழ்க்க முனையும் வழக்கமான மர்மக்கதைப் பாணியில் இருந்து விலகி, அவ்வுடலை மையமாக வைத்தும், அவ்வுடலைச் சுற்றியும் நிகழும் பல்வேறு நிகழ்வுகளும், அதனோடு தொடர்புடையவர்களின் கதைகளும், அவ்வுடலைத் தங்களது அரசியல் கட்சியை உள்ளே நுழைப்பதற்குப் பயன்படுத்தும் இரண்டு மதவாத சக்திகளின் ஆட்சேகரிப்பும் வகுப்புக் கலவரத் தயாரிப்பும் என ஒரு நவீன நாவலின் தன்மை சற்றும் குறையாமல் விரிந்து செல்கிறது இக்குறுநாவல். கதை மாந்தர்களின் ஒவ்வோர் உணர்வும் அது வெளிப்படும் வடிவமும் அவற்றின் வளர்ச்சியும் என நாவல் வடிவம் நுட்பமாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.

இன்குலாபின் யதார்த்தவாதக் கதையாடலே இந்நாவலின் உத்தி என்றாலும், நாயகன், நாயகி என்றெல்லாம் வைத்துக் கதை சொல்லாமல் நிகழ்வுகளையும், அந்தக் கிராமத்தின் உணர்வுச் சுழிப்பையும் எழுதிக் காட்டியுள்ளார். மதம் அன்றாட வாழ்வின் நிகழ்வுகள் வழியாக உள்ளுணர்வாகக் கட்டமைவதை நாவல் பல இடங்களில் வெளிப்படையாகவும் உள்ளுறையாகவும் காட்டிச் செல்கிறது. புறத்தில் உள்ள மதவாத சக்திகள் அக நிலைக்குள் தங்கள் கருத்தியலைக் கொண்டுசென்று, மதவெறி தன்னிலைகளாக எப்படி இரு மதங்களிலும் கட்டப்படுகிறது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!