மங்கோலிய மேய்ச்சல் நிலப்பரப்பில் ஓநாய்கள், நாடோடி மக்களின் ஞான குருவாகவும் போர்க்கடவுளாகவும் மேய்ச்சல் நிலக் காவலனாகவும் குலச்சின்னமாகவும் விளங்குகின்றன. அந்த ஓநாய்களின் அதாவது மேய்ச்சல் நில ஆன்மாக்கள் அழிவுற்ற கதையே ஓநாய் குலச்சின்னம்.
பெரும் பரப்பளவுகொண்ட ஒரு காட்டில் ஆயிரக்கணக்கான மான் கூட்டங்கள் மற்றும் பல விலங்குகள் உள்ளன. அவை மேய்ச்சல் நிலப் புல்வெளிகளை மேய்ந்துவிடுவதால் பற்றாக்குறை ஏற்படுவது இயற்கையே. இதனால் மேய்ச்சல் நில மக்கள் காலங்காலமாகக் கவலைகொள்கின்றனர். இந்த மேய்ச்சல் நிலப் புல்வெளிகளில் மேயும் எண்ணற்ற மான் கூட்டங்களையும் பிற விலங்குகளையும் ஓநாய்கள் கொன்று தன் உணவுக்குப் போதுமான அளவு நிவர்த்தி செய்துகொள்கின்றன. இந்த இயற்கைச் சமன்நிலையை ஓநாய்கள் செய்கின்றன. எனவே ஓநாய்கள் மேய்ச்சல் நில மக்களின் குலச்சின்னமாகிறது.
ஒத்த சிந்தனையும் மனோபாவமும் கொண்ட நான்கு மாணவர்கள் அங்கு ஒரு குடிலில் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இருவர் ஆடு மேய்ப்பவர்களாகவும் ஒருவன் மாடும், ஒருவன் குதிரையும், மேய்ப்பவர்களாகவும் இருந்துவருகிறார்கள். மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது, தொன்மையான மேய்ச்சல் நில தார்மிகங்களால் வசீகரிக்கப்படுதோடு, தொன்மங்களால் ஈர்க்கப்படுகிறார்கள். மேய்ச்சல் நிலத்தின் ஆன்மாவிடம் தங்களை ஒப்படைத்துக்கொள்கிறார்கள்.
நால்வரில் ஒருவனான ஜென் மேய்ச்சல் நில ஓநாய்களின் வசியத்துக்கு ஆட்படுகிறான். ஓநாய்கள் குறித்து நேரடி அனுபவமும் ஞானமும் பெறுவதற்காக ஒரு ஓநாய்க்குட்டியை எடுத்து வளர்க்கிறான். மேய்ச்சல் நிலத்தின் முதியவர் பெயர் பில்ஜி. பில்ஜி என்றால் ‘ஞானம் நிறைந்தவன்’ என்று பொருள். மேய்ச்சல் நிலத்தில் கடவுளின் சொர்க்கம் என்பது ‘டெஞ்சர்’ என்பதாகும்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then