சனாதனம், முதலாளித்துவம், சாதியம், பாலியல் வன்கொடுமை, நதிநீர்ப் பிரச்சினை, நிலம் மற்றும் நீரை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது, ஸ்டெர்லைட், எழுத்தாளர் படுகொலை என இந்திய நிலப்பரப்பில் நிகழும் நம் சமகாலத்தின் அத்தனை சமூக அவலங்களையும் ஆளூம் வர்க்கத்தின் அதிகார துஷ்பிரயோகங்களையும் தனது தூரிகையின் மூலம் தொந்தரவு செய்பவர்தான் ஓவியர் முகிலன். தேனி மாவட்டம் சின்னமனூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சென்னை ஓவியக் கல்லூரில் பயின்றவர். இவரது ஓவியங்கள் வெறுமனே இயற்கைக் காட்சிகளை, நிலக்காட்சிகளை, ஆடம்பர வாழ்க்கையைக் கருப்பொருளாகக் கொண்டவை அல்ல ; பேச மறுக்கும் விசயங்களைத் துணிச்சலாகப் பேசுபவை.
`ராமராஜ்ஜியம்’ என்னும் ஓவியத்தில் தாமரைகள் பூத்திருக்கும் மரத்தின் அருகில் வில்லை சற்று தொலைவில் வைத்துவிட்டுப் பாணங்களை முதுகில் சுமந்தபடி கையில் வாளுடன் நின்றுகொண்டிருப்பார் ராமன். தாமரை மலர்ந்திருக்கும் கிளைகளில் அனிதா, ரோஹித் வெமுலா மற்றும் பெயரற்ற இன்னொருவரும் தூக்கில் தொங்குவார்கள். அவர்களின் அருகே திறந்தநிலையில் கிடக்கும் புத்தகம். `அரங்கேறிவரும் ஆணவப்படுகொலைகள்’ என்னும் மற்றோர் ஓவியத்தில் தலைகளற்ற உடல்கள் அரிவாளுடன் நின்றுகொண்டிருக்க, மாலையிட்ட ஒரு பெண் மட்டும் தலையுடன் இருப்பார். தலை துண்டிக்கப்பட்டக் கழுத்தில் மணமாலை ரத்தக் காற்றில் மிதந்தபடி இருக்கும்.
இந்து மதத்தின் கடைக்கோடியில் வாழ்ந்தவர் அரியலூரைச் சேர்ந்த நந்தினி. அவரைக் காதலித்து, பாலியல் வன்புணர்வு செய்து கொன்று பிறப்புறுப்பைப் பிளேடால் கிழித்து சிசுவை வெளியில் எறிந்தவர் இந்து முன்னணியைச் சேர்ந்தவர். இச்சம்பவத்தை விமர்சிக்கும் விதமாக `நந்தினி ஒரு `இந்துப் பெண், திரிசூலம் – இந்து உணர்வு!!’ என்னும் ஓவியத்தை வரைந்திருப்பார்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then