கறுப்பின அரசியல் வலைத்தொடர்கள் ஓர் ஆய்வு

- அன்பு

வளமான அமெரிக்கா என்பது கறுப்பின மக்களின் இரத்தத்தால் எழுப்பப்பட்டது.

Selfmade:
சலவைத் தொழிலாளியாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, மிகப்பெரிய சிகையலங்கார சாம்ராஜ்யத்தையே உருவாக்கிய அமெரிக்காவின் முதல் கறுப்பினப் பெண் மில்லியினரான மேடம் சி.ஜே.வாக்கரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது `செல்ப் மேட்’ குறுந்தொடர். மொத்தமாக 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு நெட் பிளிக்ஸ்’ இல் கடந்த ஆண்டு வெளியாகியது. ஏ’லீலியா பண்டில்ஸ் எழுதிய “On Her Own Ground: The Life and Times of Madam C.J.Walker” என்ற புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஏ’லீலியா பண்டில்ஸ், நிக்கோல் ஜெபர்சன் ஆஷர், எல்லே ஜான்சன், ஜானின் ஷெர்மன் பரோயிஸ் மற்றும் டைகர் வில்லியம்ஸ் ஆகிய ஐந்து பேர் இணைந்து திரைக்கதையை எழுதியுள்ளார்கள். காசி லெம்மன்ஸ் மற்றும் டிமேன் டேவிஸ் ஆகிய இரண்டு பெண் இயக்குநர்கள் இயக்கியுள்ளார்கள். வார்னர் பிரதர்ஸ் டெலிவிஷன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. சிறந்த நடிப்பிற்காக ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற நடிகை ஆக்டேவியா ஸ்பென்சர், மேடம் சி.ஜே.வாக்கராக நடித்துள்ளார். ஆடி மன்ரோ என்பவரின் கதாபாத்திரத்தில் கார்மென் எஜோகோ நடித்துள்ளார்.

மேடம் சி.ஜே.வாக்கரை மையப்படுத்திப் பல புத்தகங்களும் சில படங்களும் இதற்கு முன்னர் வெளியாகியுள்ளன. அந்தப் படங்களைப் பற்றிய சிறு தகவலைப் பார்த்துவிட்டு, `செல்ப் மேட்’ குறுந்தொடர் பற்றிப் பார்ப்போம். * புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஸ்டான்லி நெல்சன் 1987ஆம் ஆண்டு, “Madam C.J. Walker: Two Dollars and a Dream” என்ற ஆவணப்படத்தை இயக்கினார். இதுதான் மேடம் சி.ஜே.வாக்கர் பற்றி வெளிவந்த முதல் படைப்பு ஆகும். *மேடம் சி.ஜே.வாக்கரின் வாழ்க்கை மற்றும் போராட்ட வரலாற்றை விவரிக்கும்படியான நாடகத்தை, 2006 ஆம் ஆண்டில் நாடக ஆசிரியரும் இயக்குநருமான ரெஜினா டெய்லர் “The Dreams of Sarah Breedlove” என்ற தலைப்பில் எழுதி, நாடகமாக இயக்கினார்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!