நான் ஏன் இப்போது வெட்கப்பட வேண்டும்?
எந்தத் தடுமாற்றமுமில்லாமல் என் குரலைப் பயன்படுத்தினேன்
குரலற்றவரின் துயரங்களை யாரும் அறிய இயலாது
பேசுவதற்குத் தயங்கினால் முன்னேற்றம் சாத்தியமாகாது.
முதல் வருடம், பம்பாய், சனிக்கிழமை, பிப்ரவரி 28, 1920 (இதழ் எண்.3)
சுயராஜ்ஜியம், சுயராஜ்ஜியவாதிகள் மற்றும் சுதேசிப் பொருளாதாரம்
இது சுயராஜ்ஜியம் இல்லை. இது நம் மீதான அவர்களின் ஆட்சி. கடந்த இதழில், இந்திய தேசிய காங்கிரஸ் என்று அழைக்கப்படுகின்ற தேசியக் கட்சியின் வளரும் அதிகாரப் பசி குறித்த விசயங்களை நாம் கணக்கிலெடுத்துக்கொண்டோம். அடிப்படையில், அக்கட்சி பிரிட்டிஷ் அரசாங்கத்தை நல்ல அரசாங்கமாக மாற்றுவதற்காக உருவானது. மாறிவரும் காலத்திற்கேற்ப அது தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. நல்லாட்சிக்குப் பதிலாகச் சுயாட்சியைக் கோரியது. தற்போது படிப்படியான சுயாட்சியைப் பெறுவதிலும் அது வெற்றி பெற்றுவிட்டது. அதைப் பெற்றது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. ஆனாலும்கூட, அதே அளவில் மக்களுக்குப் பெரும்பாலும் அதன் பயன் என்னவென்பதை ஆராய்வதும் தேவையானது. தான் கொடுத்த பரிசால் அடுத்தவர்கள் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், தானே தொந்தரவுகளுக்கு ஆளாகாமல் எவ்வாறு பிரம்மாசுரனிடமிருந்து (பஸ்மாசுரர்) தப்பிக்க முடியவில்லையென்ற கடவுள் சிவனின் இக்கட்டான நிலையை அறிந்தவர்களுக்குப் பரிசின் தீய விளைவுகள் குறித்து விளக்குவது தேவையற்றது. ரகசியத்தைப் புரிந்துகொண்டவர்கள் எவரோ அவர்கள் சுயராஜ்ஜியத்தின் பின்னால் உள்ள நோக்கத்தை விளக்க வேண்டும். அது இல்லாமல், சுயராஜ்ஜியம் என்னும் பரிசு நன்மையானதா அல்லது தீமையானதா என்பதை முடிவு செய்வது கடினமாகும். இதை முடிவு செய்வதற்குப் பிரிட்டிஷ் ஆட்சி ஏன் தீமையானது என்பதை ஒருவர் முடிவு செய்ய வேண்டும். ஒருமுறை இது புரிந்துவிட்டால், சுயராஜ்ஜியத்தின் பின்னால் உள்ள நோக்கத்தை அறிந்துகொள்வது என்பது எளிதானதாகும். இந்தச் சிக்கலுக்கு முக்கியத்துவம் அளித்துச் சுருக்கமாக, இங்கு அது விளக்கப்பட்டுள்ளது.
இதுவரை, இந்தியாவில் பிரிட்டிஷாரால் அறிமுகப்படுத்தப்பட்டச் சீர்திருத்தங்கள் எல்லாம் பொருளற்றவை என்ற கருத்துகொண்டோர், விடாப்பிடியான சில பிடிவாதக்காரர்களைத் தவிர – இந்திய தேசியக் காங்கிரசில் கூட – எவருமில்லை என்பது நல்ல சகுணம். இந்தச் சீர்திருத்தங்களுக்காக, இந்தத் தேசிய அமைப்பு (காங்கிரஸ்) நன்றியுள்ளதாக இருக்கிறதா என்பது வேறு விசயம். ஆனால், இந்த அமைப்பு (காங்கிரஸ்) ஏன் இதுவரை வழங்கப்பட்ட சீர்திருத்தங்களின் மீது திருப்தியடையவில்லை என்பதை அதன் வருடாந்திர மாநாடுகளில் பிரிட்டிஷ் நிர்வாகத்திலுள்ள போதாமைகளைச் சுட்டிக்காட்டி இயற்றப்படும் தீர்மானங்களில் தெரிந்துகொள்ள முடியும். இந்திய மக்களிடையே பெருகிவரும் வறுமையின் மீது பிரிட்டிஷ் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே அதன் போதாமைகள் ஆகும்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then