பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் போலீஸ் துறையிலும் பின்னர் சிறைத்துறையிலும் வேலைபார்த்த என் தாத்தா என்.கே.தாணப்பன் பிள்ளை முறையாக ஓய்வுபெறவில்லை. அதை எனக்கு அவரேதான் சொன்னார். தாத்தா அவருக்கு ஓய்வூதியம் இல்லை. திருவிதாங்கூர் இல்லாமலாகி, தமிழகம் உருவாகும்போது அவருக்கு ஐம்பது வயதுதான். அப்படியென்றால் மேலும் பத்தாண்டுகள் சுதந்திர இந்தியாவின் அரசு ஊழியராகப் பணியாற்றியிருக்க முடியும்.
நானும் என் அப்பாவைப்போல பு956-ல் மாநிலப்பிரிவினையின்போது பழைய திருவிதாங்கூர் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள், தாத்தாவும் வேலையை இழந்தார் என்றே நம்பியிருந்தேன். அது எப்படிச் சாத்தியமென்று யோசித்ததே இல்லை. பொதுவாக நாம் பழைய தலைமுறை பற்றி அவ்வளவாக யோசிப்பதில்லை. ஆகவே அவர்கள் ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஓயாமல் சொல்லப்படுவதனாலேயே நாம் செவிகொடுப்பதில்லை.
தாத்தா திருவனந்தபுரம் சிட்டி கார்ட்ஸ் நாயர் பிரிகேடில் ஹெட்கான்ஸ்டபிளாகவும், அதன்பின்னர் ஐந்தாண்டுகள் சப்இன்ஸ்பெக்டர் ராங்கில் சிறையில் ஸ்பெஷல் வார்டர் ஆகவும் பணியாற்றினார். வார்டராகப் பணியாற்றிய காலத்தில் அவர் ஒரு முக்கியமான குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் பதவிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் அவர் அதை வெளியே சொல்லவில்லை. பு948ல் நிகழ்ந்த மொத்தக்குளறுபடிகளில் ஒன்றாக தன் வேலையிழப்பையும் ஆக்கிக்கொண்டார். முறையாகப் பதவி ஓய்வு பெற்றதாகவே நாற்-பதாண்டுக்காலம் சொல்லிக்கொண்டிருந்தார்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then