தலித் கிறிஸ்தவ இறையியல் : ஓர் அறிமுகம்

- அரவிந்தன் கண்ணையன்

கட்டுரையின் நோக்கமும் எல்லையும்

இக்கட்டுரை தலித் கிறிஸ்தவ இறையியல் என்கிற செயல்பாட்டுக்கு ஓர் அறிமுகம் மட்டுமே. இதனை வாசகப் பகிர்தலாகவே கொள்ள வேண்டும். தலித் கிறிஸ்தவ இறையியல் என்பது ஒரு மதத்துக்குள் நடக்கும் நிகழ்வு மட்டுமல்ல. இது தலித் தரப்பில் சமூக ஏற்றத்தாழ்வுக்கு எதிராக எழும் பல்வகையான எதிர்க்குரல்களில் முக்கியமானது. இந்தியக் கிறிஸ்தவர்களுள், முக்கியமாக தமிழகத்தில் தலித்துகளே பெரும்பான்மையோர். ஆனால் இந்தியக் கிறிஸ்தவம் அவர்களுக்கானதா? தலித் வாழ்வியல் தேவைகளை இந்தியக் கிறிஸ்தவ இறையியல் பிரதிபலிக்கவோ வழி நடத்தவோ போதுமானதாகவோ இருக்கிறதா?

கிறிஸ்தவம் பற்றிய அம்பேத்கரின் விமர்சனம்

கிறிஸ்தவம் பற்றி அம்பேத்கர் அநேகச் சரித்திரச் சான்றுகளோடும் கூரிய விமர்சனக் கண்ணோட்டத்தோடும் எழுதிய இரண்டு கட்டுரைகள் `Christianizing the untouchableÕ மற்றும் ‘Condition of the convertÕ. அக்கட்டுரைகளில் காந்தி கிறிஸ்தவ மதமாற்றத்துக்கு எதிராகத் தெரிவித்த கருத்துகளை அம்பேத்கர் மறுக்கிறார். காந்தி இயேசுவின் பிரதான போதனைகளை ஆராதித்தார். ஆனால், கிறிஸ்தவத்தின் மீது குறிப்பாக கிறிஸ்தவ மத மாற்றத்தின் மீது காட்டமான எதிர்ப்புகளை முன்வைத்தார்.

மத மாற்றத்தை எதிர்த்ததோடு மதம் மாறுபவர்களை, குறிப்பாக தலித்துகளை காந்தி ஏளனம் செய்தார். மதம் மாறும் தலித்துகள் தத்துவப் புரிதலுடனா மாறுகிறார்கள் என்று வினவிய காந்தி, மாடுகளிடம் கிறிஸ்தவம் போதித்தால் அதற்குப் புரியுமா என்று ஒப்பிட்டார். மதம் மாற்ற முயற்சி செய்யும் பாதிரியார்கள் தலித்துகளை விட கொஞ்சமேனும் புத்திசாலியான தன்னிடம் இருந்து ஆரம்பிக்கலாமே என்றார் காந்தி.

பு9சு3-இல் காங்கிரஸ் மாநாட்டில் மேடையிலேயே மௌலானா முகம்மது அலி மத மாற்றம் இஸ்லாமியரின் குறிக்கோள் என்று பேசிய போது மௌனமாயிருந்த காந்தி தன்னுடைய பு9சு6 யோலா பிரகடனத்துக்குப் பின்னர்தான் தீவிரமாக மத மாற்றத்தை எதிர்த்தார் என்கிறார் அம்பேத்கர். மேலும் இஸ்லாமியரிடம் காட்டாத காழ்ப்பையும் கண்டிப்பையும் காந்தி கிறிஸ்தவர்கள் மிகச் சிறு எண்ணிக்கையில் இருப்பதால் அவர்களிடம் காட்டினார் என்கிறார் அம்பேத்கர்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!