வரலாற்றுக்கு முன்பு ஒலித்த குரல்

விவேக் சுப்பிரமணியன்

 

இந்த மாபெரும் இசைப் பரிணாமத்தில் பெண்களும் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருந்தனர். லிசி டக்ளஸ் (Lizzie Douglas) எனும் இயற்பெயர் கொண்ட மெம்பிஸ் மின்னி (Memphis Minnie), சிகாகோவின் ப்ளூஸ் தொன்மம் ஆண்களை மட்டுமே மையமாகக் கொண்டதாகக் கட்டமைக்கப்படுவதற்கு வெகு முன்பே, தெற்கின் கிராமப்புறங்கள், சிகாகோ ஆகிய தளங்களுக்கு இடையே இடையறாது இயங்கிக் கொண்டிருந்தார். ஒரு மகத்தான கித்தார்க் கலைஞரான அவர், 1940-களிலேயே மின்சாரக் கிட்டாரைத் தன் கைகளில் ஏந்தினார். ‘மீ அண்ட் மை ஷாஃபர் ப்ளூஸ்’ (Me and My Chauffeur Blues) போன்ற பாடல்கள், எவ்விதத் தயக்கமுமின்றித் தன் விருப்பத்தையும், தனிமனிதச் சுதந்திரத்தையும், தடையற்ற நடமாட்டத்தையும் உரக்கப் பிரகடனம் செய்த ஒரு பெண்ணைக் காலத்தின் முன் நிறுத்தின. அவர் ஆண் இசைக்குழுவின் முன்னால் வந்து நிற்கும் வெறும் அலங்காரப் பாடகி அல்ல; மாறாக, ஆண் கித்தார் கலைஞர்களுக்குச் சவால் விடுத்து, பல தருணங்களில் அவர்களை வென்றெடுத்த தன்னிகரற்ற கலைஞர்! டெல்டா ப்ளூஸ் கலைஞர்களிலிருந்து மெம்பிஸ் மின்னியைக் கடந்து, நேரடியாக மடி வாட்டர்ஸுக்குத் தாவும் எந்தவொரு வரலாற்றுப் பதிவும், வரலாற்றிலிருந்து பெண்களை நீக்கும் அதே ஆதிக்க மனோபாவத்தையே மீண்டும் பிரதிபலிக்கிறது.

1950-களின் தொடக்கத்தில் ஹவ்லின் வுல்ஃப் (Howlin’ Wolf) சிகாகோ வந்தடைந்தபோது, அவர் தெற்கத்திய ப்ளூஸின் மற்றொரு பரிமாணத்தை நகரத்திற்குள் கொண்டு வந்தார். அவரது பிரம்மாண்டமான குரல் டெல்டாவின் பாரத்தைச் சுமந்து வந்தது போல் இருந்தது. மேடையில் அவர் பாடியதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை; தன் முழு உடலாலும் பாடலுக்கு நாடகத்தன்மையைக் கூட்டினார். மடி வாட்டர்ஸ் (Muddy Waters), ஹவ்லின் வுல்ஃப் (Howlin’ Wolf) ஆகிய இரு பெரும் ஆளுமைகளின் பிரம்மாண்டத்திற்குப் பின்னாலும், செஸ் ரெக்கார்ட்ஸ் (Chess Records) நிறுவனத்தின் முதன்மை பாஸ்-கலைஞரும் (Bass), பாடலாசிரியரும், இசை அமைப்பாளரும், தயாரிப்பாளருமான வில்லி டிக்சன் (Willie Dixon) எனும் விஸ்வரூபம் நின்றிருந்தது. சிகாகோவின் உழைக்கும் கறுப்பின மக்களின் வாழ்வனுபவங்களைச் செறிவான, என்றும் நெஞ்சில் நிலைத்து நிற்கும் பாடல்களாக உருமாற்றுவதில் வில்லி டிக்சன் பெரும் பங்காற்றினார். ‘ஹூச்சி கூச்சி மேன்’ (Hoochie Coochie Man), ‘ஸ்பூன்ஃபுல்’ (Spoonful), ‘ஐ ஜஸ்ட் வான்ட் டு மேக் லவ் டு யூ’ (I Just Want to Make Love to You), ‘ஐ எய்ண்ட் சூப்பர்ஸ்டிஷியஸ்’ (I Ain’t Superstitious) போன்ற புகழ்பெற்ற பாடல்களை அவரே இயற்றினார். அவரது பாடல் வரிகள், தங்களைச் சிறுமைப்படுத்துவதை முற்றாக நிராகரித்து, ததும்பும் தன்னம்பிக்கை, பாலியல் ஆற்றல், அங்கதம் மற்றும் கம்பீரமான ஆற்றலை வெளிப்படுத்தும் மனிதர்களைக் காலத்தின் முன் நிறுத்தின. இத்தகைய பாடல்கள் கறுப்பின ஆண்களைத் தொடர்ந்து ஒடுக்கிச் சிறுமைப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு சமூகத்தில், தங்களின் சுயமரியாதையை மீட்டெடுக்கும் தீரமிக்கச் செயல்களாகவே அவை இயங்கின!

எனவே, சிகாகோ ப்ளூஸ் என்பது ஒரு கிராமிய இசை வடிவத்தின் மின்மயமாக்கம் என்பதை விட மேலானதைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. அது இடம்பெயர்ந்த தொழிலாளியின் உளவியல் மாற்றத்தை வெளிப்படுத்தியது. மிசிசிபி சாலையில் கித்தாரைச் சுமந்து சென்ற தனிமையான உருவம், தொழிற்சாலை நகரத்திற்குள் நுழைந்து

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then


Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger