கடந்த 2026 மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எதிர்பாராத வகையில் 108 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்று, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார் ஜோசப் விஜய். அரசியல் கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கு அவருடைய சினிமா புகழ் வளர்ந்திருந்ததா என்பது விவாதத்திற்குரியது என்றாலும், வியக்கவைத்த அவரது வெற்றி, தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய திராவிடக் கட்சிகளின் அரசியல் கொட்டத்தை ஒடுக்கியிருக்கிறது என்று உறுதியாகக் கூறலாம். குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல் மலிந்த எதேச்சதிகார ஆட்சி மேலும் தொடர்வதை தமிழ்நாட்டு மக்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். பட்டியல் சமூகம் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது தி.மு.க. அமைச்சர்களும், வன்மம் நிறைந்த ஐ.ஏ.எஸ். அரசு செயலாளர்களும் கடந்த ஐந்தாண்டு காலத்தில் காட்டிய பாகுபாடுகள் விவரிக்க இயலாதவை.
நிலம், கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்துத் தளத்திலும் பட்டியல் சமூக மக்களின் கோரிக்கைகளைக் குப்பைத்தொட்டியில் வீசியெறிந்தது தி.மு.க அரசு. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்ற முதல் நாளிலிருந்தே பட்டியல் சமூகத்தவருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றக்கோரி அனுப்பப்பட்ட விண்ணப்பங்களை அவர் ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை. தி.மு.க. ஆட்சியிலிருந்த ஐந்தாண்டுகளும் அடுத்தடுத்து நடந்துகொண்டிருந்த கொடூரமான ஆணவப் படுகொலைகளைத் தடுக்கப் புதிய சட்டத்தை நிறைவேற்றக் கோரி, தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சிகளும் தலித் அமைப்புகளும் விடுத்த வேண்டுகோளை மு.க.ஸ்டாலின் பொறுப்பின்றி அலட்சியப்படுத்தினார். பஞ்சமி நிலங்களை அடையாளம் கண்டு அவற்றைக் கையகப்படுத்தி, தலித் மக்களுக்குப் பிரித்துத் தர உயர் நீதிமன்றம் ஆணையிட்டும் அதை நடைமுறைப்படுத்த அவரது அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. தலித் மற்றும் சிறுபான்மைச் சமூகங்களின் மீது தி.மு.க.வும் அதன் முன்னணி அமைச்சர்களும் கொண்டிருந்த ஏளனப் பார்வையை அந்த மக்கள் புரிந்துகொண்டதன் விளைவாகவே, கடந்த தேர்தலில் தி.மு.க.விற்குத் தேர்தல் தோல்வியைத் தந்திருக்கிறார்கள். எப்படிப்பட்ட தோல்வியிலிருந்தும் எந்தப் பாடத்தையும் தி.மு.க. கற்றுக்கொண்டதில்லை என்பதைக் கடந்த 50 ஆண்டு கால அதன் வரலாறு அழுத்தந்திருத்தமாக நமக்கு உணர்த்துகிறது.
ஆனால், அதிர்ச்சியளிக்கும் வகையில் தி.மு.க.வை வீழ்த்தி, அதன் மீது பத்துப் பதினைந்தாண்டுகள் விசுவாசம் காட்டிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவையும் பெற்று, ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகம், தி.மு.க. கண்ணோட்டத்திலிருந்தும், அதன் மனப்பண்பிலிருந்தும் வேறுபட்டதா என்பதுதான் இப்போது எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால், தனது அமைச்சரவையில் எட்டு தலித் அமைச்சர்களை நியமித்துள்ளதற்காக முதலமைச்சர் விஜய் தலித் மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளார். கூடுதலாக, தனது கட்சியில் 15க்கும் மேற்பட்ட தலித் இளைஞர்களை மாவட்டச் செயலாளர்களாக நியமித்துள்ளார் என்பதற்காகவும் அவர் பாராட்டப்படுகிறார். தமிழ்நாட்டில் சமூக நீதி பெருவெள்ளமெனப் புரண்டு கொண்டிருப்பதாகத் தலித் மக்கள் பலரும் ஆங்காங்கே பேசிக்கொள்கிறார்கள்.
உண்மையில், நீதிக்கட்சி காலம் தொடங்கி, இன்றுவரையிலும் ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்குப் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்று, தமிழ்நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., போன்ற கட்சிகள் எதுவும், தமிழக வெற்றிக் கழகம் கொடுத்திருக்கும் அளவுக்கு தலித் மக்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளித்ததில்லை. பள்ளிக்கல்வித் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, சிறுகுறு தொழில் நிறுவனங்கள் துறை, வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, உயர்கல்வித்துறை, சமூகநீதித்துறை ஆகிய எட்டுத் துறைகளுக்கு தலித் அமைச்சர்களை நியமித்திருப்பதன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் தமிழக வெற்றிக் கழகம் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசும், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனும் அவரவர் கட்சித் தலைமைகளின் தேர்வினால் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள்.
‘அமைச்சரவையில் பட்டியல் சாதியைச் சார்ந்த ஒருவருக்கு மட்டுமே பதவி வழங்குவது; அவருக்கும்கூட ஆதிதிராவிடர் நலத்துறையை மட்டுமே ஒதுக்குவது’ என்ற அண்ணாதுரை காலத்தில் தொடங்கிவைக்கப்பட்ட இடைநிலைச் சாதிய அமைச்சரவை மரபை, தனது அமைச்சரவையில் எட்டு தலித் அமைச்சர்களை நியமித்ததன் மூலம் முதலமைச்சர் ஜோசப் விஜய் உடைத்து நொறுக்கியுள்ளார்; தமிழ்நாட்டில் நீதிக்கட்சி காலத்திலிருந்து பின்பற்றப்பட்டுவந்த சாதி எல்லைகளை அவர் கடந்துள்ளார் என்பது பாராட்டத்தக்க உண்மைதான். ஆனால், எப்படிப்பட்டவர்களுக்கு அந்த வாய்ப்பை அவர் வழங்கியுள்ளார் என்பதையும், கடந்த 5 மாத ஆட்சியில் அரசின் பொதுக்கொள்கைகளை வகுப்பதில் அவர்கள் விலக்கிவைக்கப்பட்டுள்ளதையும் கவனத்தில் கொள்கிறபோது சில பின்னணிகள் வெளிச்சத்திற்கு வருகின்றன.
அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்கள், ஆளுமைத் திறன் வாய்ந்த அரசியல்வாதிகள் என்பதினாலோ, மக்கள் பிரச்சினைகளில் ஆக்கப்பூர்வப் பங்களிப்பு செய்பவர்கள் என்பதினாலோ, தலித் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்ற தகுதியின் அடிப்படையிலோ அமைச்சர்களாக நியமிக்கப்படவில்லை. முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு ‘மிகவும் விசுவாசமானவர்கள்’ என்ற தகுதியின் அடிப்படையில்தான் அவர்கள் அமைச்சர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகம் தனது அமைச்சரவையில் பட்டியல் சாதியினருக்கு அளித்துள்ள பிரதிநிதித்துவம், கெடுவாய்ப்பாக வெறும் எண்ணிக்கை அடிப்படையிலானதாக அமைந்திருக்கிறது. அரசின் கொள்கை முடிவுகளை வகுப்பதில் பங்கேற்கும் அதிகாரம் தலித் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பது மிக முக்கியமான கேள்வி.
‘சமூக நீதிக்குப் பெயர்போன’ தமிழ்நாட்டில் அப்படியொரு கேள்வியைக் கேட்பதே முதலமைச்சர்களுக்குக் கொந்தளிப்பூட்டும் உரையாடலாக இருக்கிறது. காரணம், நீதிக்கட்சி காலம் தொடங்கி முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தைப் பட்டியல் சமூகத்தவருக்கு வழங்கிவிடக் கூடாது என்பதை ஆட்சி இலக்கணமாகத் திராவிடக் கட்சிகள் கடைபிடித்து வந்துள்ளன. அரசு பணிகளில் பட்டியல் சாதியினருக்குரிய இடஒதுக்கீடுகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதைக் கூர்ந்து கவனித்தால் அந்த உண்மை விளங்கும். முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட பணியிடங்கள் மூன்று சதவிகிதம்கூட நிரப்பப்படவில்லை, அது 18 சதவிகிதம் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். உடல் உழைப்புத் தொடர்பான நான்காம் பிரிவில் பணி நியமனம் 18 சதவிகிதத்தையும் கடந்து 22 சதவிகிதத்தை எட்டியுள்ளது. உண்மையில் திராவிடக் கட்சிகள் பின்பற்றிய இடஒதுக்கீட்டுக் கொள்கை வெறும் எண்ணிக்கை அடிப்படையிலானதாக (னிuணீஸீtவீtணீtவீஸ்மீ) இருக்கிறது. தரம் (னிuணீறீவீtணீtவீஸ்மீ) சார்ந்ததாக அது அமையவில்லை. உடலுழைப்புத் தொடர்பான பணியிடங்கள் குறித்த புள்ளிவிவரத்தை மட்டுமே வெளியிட்டு, பட்டியல் சாதியினர் இட ஒதுக்கீட்டை முழுமையாக நிரப்பியுள்ளோம் என்று அடுத்தடுத்து வந்த திமுக, அதிமுக முதலமைச்சர்கள் கடந்த 50 ஆண்டு காலமாகக் கூறி வந்துள்ளனர். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் எவ்வளவு நிரப்பப்பட்டிருக்கிறது; எந்தெந்தத் துறைகளில் எவ்வளவு காலி இடங்கள் உள்ளன என்பதைக்கூட வெளியிடாமல், பரம இரகசியாமாக வைத்துக்கொண்டுதான் அவர்கள் சமூக நீதியைக் காப்பாற்றி வந்தார்கள்.
பட்டியல் சமூகத்தவருக்கு ஜோசப் விஜய் வழங்கியுள்ள அமைச்சரவைப் பிரதிநிதித்துவம்கூட திமுக, அதிமுக பாணியிலேயே இருக்கிறது. சமூக ஜனநாயகத்தை வலுப்படுத்தும் தன்மையில் அது அமைந்திருக்கவில்லை. கடந்த ஐந்து மாத ஆட்சியில், பட்டியல் சமூகத்தைச் சார்ந்த அமைச்சர்கள் ஓரிருவரைத் தவிர, கட்சியிலும், ஆட்சி நிர்வாகத்திலும் முக்கியத்துவம் அற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். உட்கட்சிப் போட்டிகளாலும், மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளாலும் எந்த நேரத்திலும் அமைச்சரவை நியமனத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், ஒருவேளை அரசுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளால், பாதகமான சூழ்நிலை ஏற்படுமானால், அப்போது நிகழவிருக்கும் அமைச்சர் பதவிப் பேரத்தில் முதலில் பலியாகப் போகிறவர்கள் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த அமைச்சர்களாகவே இருப்பார்கள். தமிழக வெற்றிக் கழகத்தில் சாதி இந்துக்களின் அரசியல் பலம் அதிகரித்து, தலைமையை நெருக்கடிக்குள்ளாக்கும் அளவுக்கு வளர்ந்துவிடுவார்களேயானால், அமைச்சர் பதவியைக் கொண்டு அவர்களைச் சமாளிக்க வேண்டிய நெருக்கடி விஜய்க்கு உருவானால், அப்போதும் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த அமைச்சர்களுக்கு ஆபத்து ஏற்படும். எப்படிப் பார்த்தாலும் முதலமைச்சர் விஜய்

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then



