“எதிர்ப்புதான் கொண்டாட்டம்” – சுதாகர் கத்தக்

சந்திப்பு: பச்சோந்தி

“நான் படைத்த சிறுகதைகளின் கதாபாத்திரங்களில் சிலர் இன்று மறைந்துவிட்டனர். கணக்கிலடங்காத நினைவுகள் எனக்கு நடுக்கத்தைத் தருகின்றன. நீண்ட மணல் தெரு, ஆடுகளின் புழுக்கையும் மாடுகளின் சாணியும் கலந்துகிடக்கும். அதில் நடந்து என் பாட்டனார் வீட்டுக்குப் போய்க் கொண்டிருப்பேன்”என்று சொல்லும் எழுத்தாளர் சுதாகர் கத்தக் நெய்வேலியில் பிறந்தவர். சிறு பத்திரிகைகளில் மட்டுமே எழுதுவது என்ற தீவிரமான முடிவுடன் தமிழ் இலக்கியச் சூழலில் இயங்கிவரும் இவர், NLC மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும் தஞ்சை சாஸ்த்ரா கல்லூரியில் பொறியியல் படிப்பையும் முடித்தவர். 2012ஆம் ஆண்டு `பார்வை : பதிவுகள்’ மூலம் ‘கைம்மண்’ என்னும் சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. இக்கதைகள் கணையாழி, மன ஓசை, பாலம், உன்னதம், தலித், கனவு, புது விசை, புது எழுத்து, மணல்வீடு ஆகிய இதழ்களில் வெளியானவை. தலித் சிற்றிதழில் வெளியான ‘வரைவு‘ சிறுகதைக்காக 1997ஆம் ஆண்டுcம் ‘உதவி‘ என்ற சிறுகதைக்காக 2000த்தில் தினமணி நாளிதழின் சிறுவர் இலக்கியப் பரிசும் பெற்றிருக்கிறார். வங்காளத் திரைப்பட இயக்குநரான ரித்விக் கட்டக்கின் திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக தி.சுதாகர் என்னும் இயற்பெயருடன் கத்தக் என்பதைச் சேர்த்துக்கொண்டார்.

தென்னாற்காடு மாவட்டத்தின் வட்டார வழக்கை, எளிய மனிதர்களின் வாழ்க்கையைத் திருகலற்ற மொழியில் நேரடி யதார்த்தத்தை இவரின் கதைகள் பதிவு செய்கின்றன. உதிரி மனிதர்களின் அறியப்படாத பக்கங்களைப் பேசும் இக்கதைகள் அறிவுசார்ந்த தன்மையின்றி அனுபவத்தின் உள்ளிருந்து ரத்தமும் சதையுமான அசல் தன்மையுள்ளவை. தற்போது தமிழ்நாடு பொதுப் பணித்துறையில் உதவிப் பொறியாளராகப் பணிபுரிந்துவரும் எழுத்தாளர் சுதாகர் கத்தக்கை நெய்வேலியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தேன்.

 

உங்களின் குடும்பப் பின்னணி குறித்து

தியாகராஜன் பாஞ்சாரி சுதாகர் கத்தக் என்பது என் முழுப் பெயர். கடலூர் மாவட்டத்தின் டெல்டா பகுதியான காட்டுமன்னார்குடிதான் என் தாயாரின் சொந்த ஊர். இளமையிலேயே தாய் தந்தையரை இழந்துவிட்டவரை அவரது அண்ணன்தான் படிக்க வைத்துள்ளார். என் தந்தையின் சொந்த ஊர் நெய்வேலியிலிருந்து 8.கி.மீ தொலைவில் உள்ள ஊமங்கலம் என்னும் சிற்றூராகும். என் பாட்டனார் பிச்சைமுத்து, பிரிட்டிஷ் காலத்திலேயே அரசுப் பள்ளி தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அவர் ஆசிரியர் என்பதைவிட சிறப்பான விவசாயி, சொந்தமாக நிலமும் கிணறும் வைத்து விவசாயம் செய்தவர். கொஞ்சம் வசதியானவர் என்பதால் தன் பிள்ளைகளைப் படிக்க வைத்தார். என் தந்தையுடன் பிறந்தவர்களில் இரண்டு ஆண்கள், மூன்று பெண்கள். ஆண்கள் அனைவரும் என்.எல்.சியின் நிரந்தர ஊழியர்கள்.

நீர் சார்ந்த புவியியல் அமைப்பைப் பூர்வீகமாகக் கொண்ட என் தாய் என்.எல்.சி பள்ளி ஆசிரியராகவும் நீர் குறைந்த மேல் சீமையைப் பின்புலமாகக் கொண்ட என் தந்தை அரசுப் பள்ளி ஆசிரியராகவும் இருந்தவர்கள். ஆரம்பத்தில் என் தாயார் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கருப்பேரி என்னும் கிராமத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக இருந்தார். திருமணத்திற்குப் பிறகு என்.எல்.சி.யில் ஆசிரியராக இருந்தார். மூத்த சகோதரி ஒருவரும், இரண்டு இளைய சகோதரர்களும் உள்ளனர். மூன்று பேருமே அரசு ஊழியர்கள், கண்ணியமான படிப்பு, நிலையான வேலை என்று இளமையிலிருந்தே என் தாயார் கண்டிப்புடன் இருந்தார்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!