தேசிய அளவிலும் மாநில அளவிலும் பட்டியல் மற்றும் பழங்குடிச் சமூக மக்களுக்காகப் பாடுபட்டவர்களின் வரலாறை மக்களிடம் கொண்டு சேர்க்காத குறை உள்ளது. போலவே, மாநிலத்தின் பகுதி அளவிலும் வட்டார – கிராம அளவிலும் பணியாற்றிய தலைவர்களின் பங்களிப்பும் ஆவணங்களாக்கப்படவில்லை. கிராம அளவில் பணியாற்றிய தலைவர்களின் பங்களிப்புச் சமூக மாற்றத்திற்கு முதுகெலும்பான ஒன்றாகும். அந்த வகையில் சமூகப் போராளி திரும்புறம்பியம் சின்னையன் குறிப்பிடத்தக்கவராவார்.
சமூகப் போராளி சின்னையன், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்திற்கு உட்பட்ட திரும்புறம்பியம் கிராமம், மாதாகோயில் தெருவில் வசித்த மாணிக்கம் – சிவபாக்கியம் தம்பதியரின் மூத்த மகனாக 1934இல் பிறந்தார். இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இவரோடு உடன் பிறந்தவர்களாவர்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then