2016இல் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆய்வேடாக இருந்தபோது டக்ளஸ் ஓபரின் ‘டஸ்ட் ஆன் தி த்ரோன் (Dust on the Throne)’ நூலைப் படித்தேன். வழக்கத்திற்கு மாறான ஆவணங்களில் ஊன்றி அவர் தொகுத்திருந்த விரிவான அறிவுசார் வரலாறு (History of Ideas) பூரிப்பையும் பிரமிப்பையும் தந்தது. தற்போது அந்த ஆய்வேடு செறிவான நூலாக உருப்பெற்றுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான கண்டில் ஹிஸ்டரி விருதுக்கான குறும்பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.
நவீன இந்திய வரலாற்றை வடிவமைப்பதில் பௌத்தம் செலுத்திய தாக்கம் குறித்தும், உலகளாவிய நவீன பௌத்தத்தை உருவாக்க அயல்நாட்டுப் பௌத்த மடங்களும் நாம் அதிகம் அறிந்திடாத இந்திய சாதி எதிர்ப்புச் செயற்பாட்டாளர்களும் ஆற்றிய பங்கு குறித்தும் இந்நூலில் பேசப்பட்டுள்ளது. நவீன தெற்காசியாவில் பௌத்தம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் சிந்தனைக்கான புதிய திசைகளை வழங்கும் இந்நூல் குறித்தும் அவருடைய வாதங்கள் குறித்தும் மேலும் அறியும் பொருட்டு ஓபருடனான மின்னஞ்சல்வழி உரையாடல்.
இந்தியத் துணைக்கண்டத்தில் பௌத்தம் முற்றிலுமாக அழிந்துவிட்டது, நவீன காலனித்துவ காலத்தில்தான் பௌத்தம் மீள் கண்டுபிடிப்பு செய்யப்பட்டது போன்ற வாதங்களை, வெவ்வேறு நிலப்பரப்புகளிலிருந்தும் மொழிகளிலிருந்தும் (நூல்) தரவுகளை எடுத்துக்காட்டி இத்தகைய வாதங்கள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறீர்கள். பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து நவீன பௌத்தம் விளங்கிய வரையறையைத் தருகிறீர்கள்.
பன்மொழி மூலங்களைப் பயன்படுத்துவதைப் பற்றியும் மூலநூல்கள், மொழிபெயர்ப்புகளுடன் நீங்கள் எவ்வாறு செயல்பட்டீர்கள் என்பதைப் பற்றியும் கூற முடியுமா?
காலனிய காலத்துப் பௌத்தத்தை ஆராய்வதில் உள்ள சிக்கல் பௌத்த நூல்களும் பௌத்தம் பற்றிய குறிப்புகளும் பல்வேறு மொழிகளிலும் எழுத்துகளிலும் விரவியிருப்பதுதான். பௌத்தம் என்றதும் பாலி, சமஸ்கிருதம் போன்ற நிறுவப்பட்ட மொழிகளோடு மட்டுமே இணைத்துப் பார்ப்பதால் பரந்துபட்ட பார்வையைத் தவற விடுகிறோம். சிந்தனைகள், கருத்துகள் எவ்வாறு வெவ்வேறு பகுதிகளுடன் தொடர்புகொண்டிருந்தன என்பதும், பௌத்தம் குறித்த இந்தியா முழுமைக்குமான, ஏன் உலகளாவிய பார்வையை வழங்க வேண்டியிருப்பதும் புரிந்தவுடன் குறிப்பிட்ட நபர்களையும் பனுவல்களையும் மட்டும் பார்ப்பதைக் கடந்து பரவலாக வாசிக்கத் தொடங்கினேன்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then