எழுத்தாளர், பேச்சாளர், ஓவியர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பன்முகங்களில் இயங்கிவரும் யாக்கன், விருதுநகர் மாவட்டம், வ.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 2000இல், புரட்சியாளர் அம்பேத்கரின் வழியைப் பின்பற்றி குடும்பத்தினருடன் பௌத்தம் ஏற்று, பௌத்தம் ஏற்போருக்கு வழிகாட்டியாகவும் திகழ்கிறார். முல்லை ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் என்ற அச்சகத்தை 2000ஆம் ஆண்டில் நிறுவி தலித்தியம், அம்பேத்கரியம், பௌத்தம், பெண் விடுதலை தளங்களில் பேசும் நூல்களை மட்டுமே நூற்றுக்கணக்கில் வெளியிட்டுள்ளார். 2004இல், ‘கலகம் வெளியீட்டகம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கி நடத்திவருகிறார். குடும்பச் சூழ்நிலை காரணமாகச் சட்டப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்ட இவர், தற்போது சென்னையில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்துவருகிறார். 1980களில் மதுரையை மையமாகக் கொண்டு செயல்பட்ட ‘தலித் யூத் மூவ்மெண்ட்’ என்கிற அமைப்பில் இணைந்து பணியாற்றிய யாக்கன், கடந்த 2000ஆம் ஆண்டு முதல் ‘தலித் முரசு’ இதழில் எழுதத் தொடங்கினார். பின்னர் அதன் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றினார். செங்கல்பட்டு மாண்டூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவந்த சமூகச் செயல்பாட்டு மையத்தின் இயக்குநராகச் செயல்பட்டார். 2012ஆம் ஆண்டு முதுபெரும் தலைவர் கொடிக்கால் சேக் அப்துல்லா அவர்களுடன் இணைந்து வணிக நோக்கமற்ற, சமூக அக்கறை கொண்ட தலித் பத்திரிகையாளர்களை ஒருங்கிணைத்து, ‘தமிழ்நாடு மாற்று பத்திரிகையாளர், எழுத்தாளர் பேரவை’ என்ற அமைப்பை உருவாக்கி, செயல்பட்டுவருகிறார். ‘அம்பேத்கரின் தம்மப் புரட்சி’, ‘கடும்சொல் கேளீர்’ ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும், ‘இருளில் முளைத்த மிருகம்’ என்கிற சிறுகதைத் தொகுப்பையும், ‘கழுவப்படாத பெயரழுக்கு’ என்கிற ஆய்வு நூலையும் எழுதியுள்ளார். ‘அரசமைப்புச் சட்ட அவைக்குள் டாக்டர் அம்பேத்கர் நுழைந்த வரலாறு’ என்கிற நூலிற்காக, தமிழ்நாடு அரசின் சிறந்த தலித் எழுத்தாளர்களுக்கான விருதினைக் கடந்த 2021ஆம் ஆண்டு பெற்றுள்ளார். தலித் மக்கள் மீது நிகழ்த்தப்படும் சாதிய தீண்டாமை வன்கொடுமைகளுக்கெதிராகக் குரல் கொடுப்பதோடு, களச்செயற்பாட்டாளராகவும் இயங்கும் யாக்கன், தனது முப்பதாண்டுகால பொதுவாழ்க்கை அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். அவரது கருத்துகள் சமூக அக்கறைகொண்ட யாவரையும் விழிப்படையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
m
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இறந்தவர்களின் உடலை பொதுப்பாதையில் எடுத்துச் சென்று புதைப்பதற்குக்கூட சுதந்திரம் இல்லாமல் தலித் மக்கள் அல்லல்படுகிறார்கள், இதற்கு ஒரு விடிவு காலம் எப்போது வரும்?
பொதுச்சாலை – பொதுப்பாதைகளில் இறந்தவர்களின் உடலைத் தலித்துகள் எடுத்துச் செல்வதற்குத் தடை விதிப்பது, இன்று வரையிலும் தீண்டாமை இந்தியாவில் உயிரோடு இருப்பதற்கான அடையாளமாகவும், இந்தியா பண்படாத நாடாக இருந்து வருகிறது என்பதற்கான சான்றாகவும் இருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகான இந்த 75 ஆண்டு காலங் களில், சமூகக் கட்டமைப்பில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்துகிறது. சமூகக் கட்டமைப்புகளை மாற்றுவதற்கு நமது முன்னோர்கள் பல்வேறு வழிவகைகளைச் செய்திருக்கிறார்கள். அரசமைப்புச் சட்டம் குடிமக்கள் அனைவருக்கும் அனைத்து உரிமைகளையும் வழங்குகிறது. ஆனால், அவை இன்னமும் தலித் மக்களுக்கு முழுதாகப் போய்ச் சேரவில்லை என்று சொன்னால், அரசமைப்புச் சட்டம் ஒருசில சக்திகளால் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். அரசமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற சக்திகள், அதை அதே பொருளோடு நடைமுறைப்படுத்தவில்லை. தலித் மக்களின் சமூக உரிமைகளை மீட்டுத் தருவதற்கு, அரசமைப்புச் சட்டத்தைத் தவிர வேறெந்த வழிமுறைகளும் இல்லை. சமூகத்தளங்களில் அனைத்து உரிமைகளும் அனைத்து மக்களுக்கும் போய்ச் சேர வேண்டும் என்கிற பிரச்சாரத்தைக்கூட மத்திய, மாநில அரசுகள் முன்னெடுக்கவில்லை.
இரண்டாவதாக, 1990இல் இந்திய பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இந்திய அரசு ‘காட் ஒப்பந்தத்தில்’ (GATT) கையொப்பமிட்டதன் மூலம் பன்னாட்டுப் பெருவணிக முதலீடுகள் இந்தியாவிற்குள் நுழைந்தன. அது மிகப்பெரிய பொருளாதார வாய்ப்பை, அனைத்து மக்களுக்கும் ஏற்படுத்திக் கொடுத்தது. அதிலும் கூட தலித் மக்கள் கைவிடப்பட்டார்கள். இங்கே என்ன சமூக மனநிலை இருக்கிறதோ, அது பெரும் முதலாளிகள் மற்றும் ஊழியர்களுக்கும் பரவியது. எனவே, எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இந்தச் சமூகப் புறக்கணிப்பு தலித் மக்களை வதைத்துக்கொண்டே இருக்கிறது. முதலில் நான் சொன்னது, அரசமைப்புச் சட்டம் ஏற்படுத்திக் கொடுத்த அரசியல் மாற்றம். 1990இல் நடந்தது பொருளாதார மாற்றம். இந்த இரண்டு மாற்றங்களும் சமூகத்தின் சாதியக் கட்டமைப்பில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then