சாராவிற்குக் கடைசியாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிள்ளையின் பிறப்பு தந்தை எமோஸின் வீட்டில் பெரு மகிழ்ச்சியைக் கொண்டு வந்தது. ஞானஸ்னானத்தின் போது குழந்தைக்கு மூன்று பெயர்கள் வைக்கப்பட்டன- ஜான்,(ச்)சீக்கே, ஒபியாஜுலு. கடைசிப் பெயரின் பொருள்-இறுதியாக மனம் அமைதியடைந்தது. இந்தப் பெயரைக் கேட்கும் எவரும் அதற்குரியவன் ஒரே மகனாக இருக்க வேண்டும் அல்லது கடைசியாகப் பிறந்திருக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்வார்கள். அந்தக் குடும்பத்தின் ஒரே ஆண் மகவு சீக்கே . அவனுடைய பெற்றோர்கள் முன்னதாக ஐந்து பெண் குழந்தைகளைப் பெற்றிருந்தார்கள்.
அவனுடைய சகோதரிகளைப் போலவே சீக்கேவும் `வெள்ளைக்காரப் பாணியிலேயே’ வளர்க்கப்பட்டான். அதாவது பாரம்பரியத்திற்கு மாற்று முறையில். பல வருடங்களுக்கு முன் சிறிய பூசை மணியொன்றை வாங்கி வைத்திருந்தான் எமோஸ். காலையில் முதல் வேலையாகவும், இரவில் படுக்கப் போகும் முன்பும் மணியோசை எழுப்பித் தன் குடும்பத்தாரைப் பிரார்த்தனை செய்யவும் துதிப் பாடல்கள் பாடவும் அழைப்பான். இது வெள்ளைக்காரர்களின் வாழ்க்கை முறைகளில் ஒன்றாகும். பக்கத்து வீட்டிலிருந்து எதையும் வாங்கி உண்ண வேண்டாமென்று தன் பிள்ளைகளுக்குக் கூறி வைத்திருந்தாள் சாரா.
ஏனென்றால், அவர்கள் தங்கள் உணவை உருவச் சிலைக்குப் படைப்பார்கள் என்று அதற்கான காரணத்தையும் சொல்லி வைத்திருந்தாள். அதன் மூலம் புராதனமான பண்பாடாகக் கருதப்படும் “குழந்தைகள் அனைவரின் பொதுவான பொறுப்பு” என்ற கருத்துக்கும் அதன்படி அங்குள்ள பெற்றோர்களுக்கிடையிலான உறவு எப்படிப்பட்டதாக இருந்தபோதும் குழந்தைகள் ஒன்றாக விளையாடியும், தங்கள் உணவைப் பகிர்ந்தும் கொள்ள வேண்டுமென்று நம்புவதற்கும் எதிராகத் தன்னை நிறுவிக்கொண்டாள்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then