‘செல்விதாஸ்’ – இந்தியாவின் முக்கியமான கல்வியாளர்களுள் ஒருவர்

- வி.கே.நடராஜ்

குறிப்பு : செல்விதாஸ் என்பவர், மைசூர் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக இருந்தவர். அவர் 26.04.2021 அன்று காலமானார். அவரைப்பற்றிய அஞ்சலிக் கட்டுரை பேராசிரியர் வி.கே.நடராஜ் அவர்களால் எழுதப்பட்டு Economic & Political Weekly (October 2, 2021) இதழில் வெளியானது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பே இக்கட்டுரை. ஒரு கல்வியாளராக அவரின் போராட்டங்கள் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. அதோடு அவர் தமிழர் என்பதையும் தலித் என்பதையும் கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். கல்வியாளராக விளங்கிய தமிழகத் தலித் ஒருவரைப் பற்றிய விரிவான பதிவாக இக்கட்டுரையை விளங்கிக் கொள்ளமுடியும். செல்விதாஸ் அவர்களுக்கு வேறொரு பின்புலம் இருக்கிறது. இது இக்கட்டுரைக்குத் தேவையில்லை என்று விடப்பட்டிருக்கலாம். அத்தகவல்களோடு சேர்த்து இக்கட்டுரையை வாசித்தால் முழுமைபெறும் என்று நம்புகிறோம்.

இக்கட்டுரையில் சொல்லப்படாத செல்விதாஸின் தந்தை பெயர் ஆளவந்தார்தாஸ் எனப்படும் ஆர்.ஏ.தாஸ். ஆர்.ஏ.தாஸின் தந்தையார் அதாவது செல்விதாஸின் தாத்தா பெயர் ராமதாஸ். தாத்தா ராமதாஸ் வைணவ நெறியில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். இவர்களின் பூர்வீகம் வேலூர். வைணவ நெறியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்டோரில் ஒரு குழுவினர் அரசியல் தலித்தோடும் தொடர்புகொண்டிருந்தனர். குறிப்பாகக் கல்விப்பணியில் ஈடுபட்டனர். கோலார் தங்கவயலில் வைணவப் பின்புலத்தோடு கல்விப் பணிகளை மேற்கொண்ட பெரியவர்கள் இருந்தனர். அவர்களோடு இக்குடும்பமும் தொடர்பு கொண்டிருந்தது. தந்தையார் ஆர்.ஏ.தாஸ் கோலார் தங்கவயலில் ஒப்பந்தக்காரராக இருந்து பணக்காரராக இருந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கிரேக்க டிப்ளமோ பயின்றிருந்தார். மைசூர் சமஸ்தானத்தின் கீழ் கோலார் தங்கவயல் ஆதிதிராவிடர்கள் பிரதிநிதியாகச் செயல்பட்டார். வடஆற்காடு மாவட்டக் கல்வி சங்கமேலாளர் பொறுப்பை ஏற்றிருந்தார். தன்னுடைய தந்தையார் பெயரில் வேலூரில் ராமதாஸ் விடுதியை ஆரம்பித்தார். இவருடைய மகள்தான் செல்விதாஸ். இவருடைய முழுப்பெயர் பங்கயதாஸ் செல்வி. இவருடைய குடும்பமே கல்விக்குடும்பம். குடும்பத்தைத் தாங்கவேண்டிய பொறுப்பு இருந்தும் தான் படித்ததோடு குடும்பத்தில் எல்லோரையும் நன்கு படிக்க வைத்தார். இவருடைய சகோதரர் ஆர்.ஏ.சீதாராம் தாஸ்., ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவர் தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியராக இருந்து காலமானார். இத்தகைய பின்புலத்திலிருந்து சென்ற செல்வி மைசூர் பல்கலைக்கழத்தின் முதல் பெண் துணைவேந்தராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இப்பின்புலத்தைச் சொல்லுவதற்கே இக்குறிப்பு.

– ஸ்டாலின்


மைசூர் பல்கலைக்கழகம் நாட்டின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று. அந்த வரிசையில் அதற்கு ஆறாம் இடம். இந்தியாவில் மன்னராட்சி நடைபெற்ற போது மைசூர் சமஸ்தானத்தில் அது அமைக்கப்பட்டது. அரசர் நான்காம் கிருஷ்ணராஜ உடையாருக்கும் அதன் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்திய திவான் எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்கும் தோற்றம் இதில் முக்கியப் பங்கிருந்தது. இந்தியாவை ஆண்ட பிரிட்டிசாரிடமிருந்து ஒப்புதலைப் பெறுவதென்பது மன்னராட்சி நடந்து வந்த மைசூர் மாநிலத்திற்கு அவ்வளவு எளிதானதில்லை. பலவகைகளிலும் முன்னேறியிருந்த பிரிட்டிசாரின் ஆளுகைக்கும் கீழிருந்த சென்னை மாகாணத்தின் எதிர்ப்புகளோடு போராடுவது மைசூர் மாநிலத்திற்கு எளிதாக இல்லை. அதைக்காட்டிலும், மைசூர், தற்கால மைசூரு, ஒரு சில முற்போக்குக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி நற்பெயரை ஈட்டியிருந்தது. அவற்றுள் ஒன்றுதான் பெண்களுக்கான கல்வி. திவான். விஸ்வேஸ்வரய்யா பெண்கல்வியை ஊக்குவிப்பதிலும், இளம்வயதில் நடைபெற்ற திருமணங்களைத் தடுத்து நிறுத்துவதிலும் ஆர்வமாக இருந்தார். அந்தக் காலத்தைப் பொறுத்தவரை, அவை, புரட்சிகரமான பகுத்தறிவுத் திட்டங்கள் இருந்தபோதும், இந்தப் பல்கலைக்கழகம் தோன்றியதிலிருந்து, ஒரு பெண் துணைவேந்தரைப் பெற தொண்ணூறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. அந்த மைல்கல் சாதனையை 1970 இன் இறுதியில் தான் அந்த மாநிலத்தால் எட்டமுடிந்தது. செல்விதாஸ் அவர்கள் மைசூர்ப் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர். அன்றைக்கு அவர்தான் ஒரே பெண் துணைவேந்தரும். அவர் 26.4.21 அன்று காலமானார்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger