சில விஷயங்களில் எனக்கு அசாத்தியமான பொறுமையுண்டு. குறிப்பாக சமூக வலைத்தளங்களின் ட்ரெண்டுகளுக்கு ஏற்றவாறு பயணிக்காமல் பல சமயங்களில் அதீத பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலை எனக்கு இருந்திருக்கிறது. சமூக அழுத்தத்திற்கு உடன்படாமல் இருப்பது என்னுடைய ஒரு சில நல்ல பழக்கங்களில் ஒன்று. அப்படித்தான் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பு வெளியான மலையாளப் படத்தை இந்த வாரம்தான் பார்த்து முடித்தேன். பெண்ணியம் என்கிற லேபிளோடு சில பல நல்ல விமர்சனங்களை அந்தப் படம் பெற்ற போது திரும்பிய திசையெல்லாம் படத்தைப் பார்த்துவிடீர்களா என்று கேட்பதையே ஒரு ட்ரெண்டாக வைத்திருந்தார்கள். என்னுடைய ஆர்வத்தையெல்லாம் அடக்கி ஒரு சீரான தெளிந்த மனோநிலையில் அந்தப் படத்தைக் காண ஆறு மாதங்கள் ஆகின.
உண்மையைச் சொல்லப் போனால் அது நல்ல படம்தான். சிறந்த படமும் கூட. பல காலமாகத் திரையில் பேசாத கருத்தைப் பேசிய படம் என்பதை மறுக்க இயலாது. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்கிற காலம் போய், படிப்பும் படி, வேலைக்கும் போ, அடுப்பையும் நீயே ஊது என்கிற நவீன ஆணாதிக்க நடைமுறைக்கு நம் சமூகம் மிக இலகுவாக மாறிருக்கிறதை இந்தப் படம் அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறது. அதற்காகவே இந்தப் படத்தைப் பலமாகப் பாராட்டலாம். ஆனால், பாருங்கள் எனக்கு இந்தப் படம் மனதோடு ஒட்டவில்லை. ஒன்று படம் பார்ப்பதற்கே ஒரு வகையில் அழற்சியாக இருந்தது. மீண்டும் மீண்டும் ஒரு பெண் அடுப்படியிலேயே உழன்று கொன்று இருந்த காட்சிகள் எரிச்சலை உண்டாக்கியது, இரண்டாவது நான் வரும் சமூகத்திற்கும் இந்தப் படத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாதது படத்தோடு என்னை ஒன்ற விடவில்லை.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then