சில நாட்களுக்கு முன்பு நான் ஒரு மனநல மருத்துவமனையில் இருந்தேன். காரணம், காதல் பித்து நிலை. அவளைப் பற்றிய எண்ணங்கள் பனம்பழத்திலிருந்து பாணி கசிவது போல, இதயத்திலிருந்து வடிந்துகொண்டே இருந்தன. பெண்களால் கசக்கி மிதிக்கப்பட்ட பூக்கள், என்னைப் போன்ற பல காதலர்களின் இதயங்களில் உள்ளன. நான் எரிகின்ற கால்களை இழுத்துக்கொண்டு நடந்தேன். கடலில் நீந்திச் சோர்வடைந்தேன். கொடுமுடிகளுக்கு மேலே உள்ள பனிக்கட்டிகளில் அமர்ந்து, விம்மி விம்மி அழுதேன். காதலால் வெந்துபோய் பல நிறங்களில் உள்ள மாத்திரைகளை மாறி மாறி உட்கொண்டேன்.
பைத்தியம் தணிந்ததும் வாப்பா என்னை வீட்டிற்கு அழைத்து வந்தார். விரல்களைப் பிடித்துக்கொண்டு நம்பிக்கையற்ற என் கண்களைப் பார்த்தார். அவர் கண்களில் லேசான ஒளியின் கீற்று இருந்தது. மேல்தளத்தில் என் அறையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்களுக்கிடையிலிருந்து ஷேக்ஸ்பியரும் என்னைப் பார்த்தார். இறுதியாண்டு ஆங்கிலப் பட்டதாரி மாணவனாயிருந்த நான், எத்தனையோ தடவை அவளுக்கு ‘ட்ரூ லவ்’ பாடத்தை நகலெடுத்துக் கொடுத்திருக்கிறேன். அந்தப் புத்தகத்திற்குள்ளேதான் அவள் எனக்கு எழுதியதும், நான் அவளுக்கு எழுதியதுமான பல கடிதங்களும் உள்ளன. கண்ணாடி உடைந்து சில்லுச் சில்லாகச் சிதறுவதுபோல அவளுடைய சிரிப்பு என்று நான் நினைத்தேன்.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





