இரவெல்லாம் பூச்சிகளின் ரீங்கரிப்பால் எனது அறை மிதந்துகொண்டிருந்தது. பூச்சிகளின் ஒலி இசைத் துணுக்குகள் போலக் கேட்டுக்கொண்டே இருந்தது. இந்த ஒலியை என் பால்யத்தில் தொடர்ந்து கேட்டு வந்திருக்கிறேன். இந்த ஒலியைக் கேட்கும்போது என்னையறியாமலேயே ஏதோ விநோதப் பூச்சியன்றின் சிறகை என் முதுகில் பெற்றது போல ஆனந்திப்பேன். பூச்சியினங்கள் மனிதன் தோன்றிய காலத்திற்கு முற்பட்ட அண்ட வெளியில் ஆதி உயிர்களாக சிருஷ்டி கொண்டு பறந்து அலைந்தே இங்கு வந்துள்ளன. அப்படி வந்த பூச்சியினங்கள் பெரு வெளியில் இசையை லயமாக்கிப் பாடிக்கொண்டே பறந்து பறந்து மறைகின்றன.
சிலபோது கண்களுக்கு வெகு அண்மையில் அவை ஒரு குறுக்கு வெட்டாகப் பறந்து செல்கின்றன. அப்படிச் செல்லும் பூச்சிகள் திரும்பி வருவதில்லை. அப்பூச்சிகள் தங்களுக்கான செடியை எங்கோ ஒளித்து வைத்துள்ளதை நினைப்பேன். இருந்தபோதும் இந்தப் பூச்சிகளின் செடிகளை மனிதர்கள் விட்டு வைத்திருப்பார்களா என்பது எனக்குச் சந்தேகமாக உள்ளது. பூச்சிகள் ஆதிகால உயிர்கள் என்பதிலேகூட எனக்கு வலுவான சந்தேகமுண்டு. அண்டவெளி கர்ப்பந்தரிப்பதற்கு முன்னே சூன்யமென்று இருக்குமானால் அந்தச் சூன்யத்தைச் சுற்றிப் பூச்சிகள் பாடித் திரிந்திருக்கலாம் என்று நம்புகிறேன். சூன்யத்தின் இடமும் இருப்பும் இல்லையென்றாகக் கூடுமானால் அந்த ஒன்றுமில்லாமையின் ஒன்றில் எது இருந்ததோ அது ஒரு பூச்சியாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் நம்புகிறேன். அந்தப் பூச்சியின் பூச்சிகள்தான் இந்த இரவிலும் ரீங்கரிக்கின்றன.
நான் இந்த விடுதிக்கு வந்த பிற்பாடு எனக்கு வேறு எங்குமே போகத் தோணாதது. இந்தப் பூச்சியினங்களின் ஆர்ப்பரிப்புதான். அவை குரலின் ஒலியால் அலங்கரிக்கப்பட்டுள்ள ஆன்மாவை ஊதிவிடுகின்றன. பூச்சியினங்களுக்கு ஆன்மாவா என்று சிலர் கேட்பதுண்டு, தனது சுயக்கழிவுகளை எந்நேரமும் தியானித்துக்கொண்டு மனிதன் எங்கெல்லாம் காலடி வைக்கிறானோ அந்த இடம் அவனுக்காகவே உருப்பெற்றுவிடுகிறது. இது குரூர ஆக்கிரமிப்பென்று அவன் கருதுவதில்லை. தன் இருப்பிடம் தேடுதலில் புலிக்காடுகள் ஆணை மலைகள் சிங்கக் கைலிகள் பன்றிப் பள்ளம் நாய்களின் ஏரிகளும் தப்பவில்லை.
வழித்தடத்தில் பயணிக்கும்போதே அவன் யானைகளின் காட்டைச் சூறையாடுவானென்று தெரிந்தது. அப்படித்தான் நிகழ்ந்தது. யானைகள் தாகத்திற்காகப் பிளிறுகின்றன. மின் வேலியிட்டு யானையின் குடிநீரைக் கேனிலிட்டு விலைக்கு விற்கிறான். இரவில் இந்தக் கோடை வெம்மையில் தாகத்தில் அழுது ஓடிவரும் யானைகள். மின் வேலியினால் மின்சாரம் பாய்ச்சப்பட்டுக் கதிகலங்கித் திரும்புவதைப் பார்த்திருக்கிறேன். இவற்றில் சில யானைகள் தாகத்திற்காக மின்சார வேலியைத் தாண்டப் பார்த்து இறந்து வீழ்ந்து விடுகின்றன. ஊனமான யானைகளுமுண்டு.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then