காய்ந்த விறகிலிருந்து சடசடத்து எரிகிறது கொள்ளி ஆடாது அசையாது ஆழ்ந்து எரிகிறது அகலின் சுடர் ஊறிய திரியிலிருந்து கங்கின் தணலுக்கும் பின் கங்கிலிருந்து திரிக்குமாய் மதர்த்து ஒளிர்கிறது...
எல்லா இரவுகளிலும் கனவுகள் வருகின்றன. தலைகோதியபடி நெடுந்தூரம் பயணிக்கிறது என் கனவிற்கென்று ஒரு தூக்கம் வைத்திருக்கிறேன்… அவை என் இரவுகளின் பிரக்ஞையைக் கொன்று வளர்கிறது… மதுதிரவங்களின்றி உடல்களை...