‘வரலாற்றில் முதல்முறை’ என்ற பதம் ஒருவருடைய பெயருக்கு ஒருமுறை கிடைப்பதே பெரிது. அரிதிலும் அரிதாக ஒரு சிலருக்கு அது இரண்டு, மூன்று முறைகள் வாய்க்கும். அதுவும் கூட அவர்களின் பிறவி மேதைமைக்கோ, தனிப்பட்ட சாதனைக்கோ சான்று கூறுவதாகவே அமையும். ஓரினத்தின் தலையெழுத்தையே, ஒரு தேசத்தின் பண்பையே மாற்றியமைக்கும் விதமாக அமையும் ‘வரலாற்றில் முதல்முறை’கள் மிகவும் அபூர்வம். தென்னாப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் டெம்பா பவுமா பெயருக்கு முன்னுள்ள மூன்று ‘வரலாற்றில் முதல்முறை’கள் அப்படி அபூர்வமானவை. தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் வரலாற்றில் முதல் கறுப்பின பேட்ஸ்மேன், தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் வரலாற்றில் முதல் கறுப்பினக் கேப்டன், தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் வரலாற்றில் உலகக் கோப்பை வென்ற முதல் கேப்டன்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then