வலது பக்கமாகத் திரும்பிப் படுத்து மீண்டும் கண்களை மூடிக்கொண்டார் பெரியமணி. கண்களைத் திறந்த கண நேரத்திற்குள்… சமாதியின் மேற்குச் சுவரிலிருந்த அவரது மனைவி லட்சுமியின் படம் கண்களுக்குள் குத்திக்கொண்டு நின்றது.
உடலின் மீது போர்த்தப்பட்டிருந்த கூரைச் சேலை, வாயின் மீது இடித்து வைக்கப்பட்ட வெற்றிலைத் தொக்கு… பிதுங்கிய கண்களின் மீது மூடியிருந்த ஒரு ரூபாய் நாணயங்கள். எல்லாமும் அவர் கண்களுக்குள் நின்றது.
லட்சுமி படத்துக்குப் பக்கத்தில் அங்காளம்மன், வள்ளிமலை முருகர் படங்கள். அடுத்து இவரது அய்யா செங்கல்வராயரின் படம். அதுவும் சவ ஊர்வலத்திற்கு முன்பு நாற்காலியில் உட்கார வைத்து எடுக்கப்பட்டதுதான்.
அந்த வரிசையின் கடைசியில் தொங்கியபடி சிரித்துக்கொண்டிருந்தான் பரந்தாமன். நேற்று காலையில் அவன் செத்துப் போனதாக தகவல் வந்ததிலிருந்து அப்படிதான் சிரித்துக் கொண்டிருக்கிறான். நிதானமாக உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரியும் மாறுகண் சிரிப்பு.
அவரது உடல் ஒருமுறை விலுக்கெனத் தூக்கிப் போட்டது. உடலைத் திருப்பி இடப்புறமாகப் படுத்தார். பரந்தாமனின் சிரிப்பும் அவரோடு திரும்பிப் படுத்தது.
மார்பு படபடக்க, சட்டென எழுந்து உட்கார்ந்து கொண்டார். ‘என்ன அவஸ்தை இது..?’
மீண்டும் சுவரைப் பார்த்தார். படங்களின் வரிசையில் பரந்தாமனின் படம் எதுவுமே இல்லை. திடுக்கிட்டுக் கண்களை நன்றாகத் திறந்து பார்த்தார். தலையை வேகமாக உதறி, லட்சுமியின் படத்தை மட்டும் உற்றுப் பார்த்தார். ரூபாய் நாணயங்களுக்குள் பிதுங்கிய கண்கள் மறைந்து, அவளின் அழகான கண்கள் அவருக்குத் தெரிந்தன. லட்சுமிக்கு அழகே அவளது கண்கள்தான். குள்ளாக் கண்டை மீன்களைப் போல படபடக்கும் கண்கள். ஆனால் ஒரு நாளும் அவர் முகத்தை அவள் நேராக நிமிர்ந்து பார்த்ததே இல்லை. அவரும் அப்படிதான். ”சோறு ஆச்சா… சாறு ஆச்சா..?” என வீட்டின் சுவரைப் பார்த்துதான் கேட்பார்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then