தமிழ்த்தேசியச் சிந்தனை மரபும் நவயானா பௌத்தமும்

கச்சாமி

பௌத்தம் தமிழ் மண்ணில் தோன்றிய மதமில்லை என்பது அனைத்து ஆய்வாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்று உண்மை என்பதை முன்னரே குறிப்பிட்டிருக்கிறோம். அயோத்திதாசர் ஒருவரே இதில் விதிவிலக்கானவர். பௌத்தம் தமிழ் மண்ணுக்கு வெளியிலிருந்து வந்தது என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமுமில்லை. வேறொரு மொழி பேசும் நிலத்திலிருந்து வந்த மதமெனினும் பௌத்தம் வளர்த்த தமிழ், தமிழ் வளர்த்த பௌத்தம் எனச் சொல்லும்படியாக அது தமிழ் மண்ணில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆழ வேரூன்றிப் படர்ந்து தழைத்திருந்தது. தமிழ் மண்ணில் மட்டுமில்லை. பல தேசங்களையும் வெவ்வேறு மொழி பேசும் மக்களிடத்திலும் மிகப் பரவலான ஆதரவைப் பெற்றுள்ளதை நாம் இன்றும் கண்டு வருகிறோம். குறிப்பாக, ஆசியக் கண்டம் முழுக்க நிறைந்து பரவியிருக்கிற சமய நெறியாக பௌத்தம் திகழ்கிறது. இந்த வரலாற்று உண்மையை யாரும் மறுக்க முடியாது. மறக்கவும் கூடாது. அவ்வாறு மறந்துபோனவர்களுக்கு நாம் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.
தொ.பரமசிவன் தமிழகத்தில் பௌத்தம் வந்த வரலாறு குறித்துக் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார் :

“தமிழ்நாட்டில் இன்றும் படித்தவர்கூட இப்படித்தான் சொல்கிறார்கள்: ‘சமணமும், பௌத்தமும் வட நாட்டில் பிறந்து வளர்ந்த மதங்கள். தமிழ்நாட்டிற்கும் அவற்றிற்கும் சம்பந்தம் இல்லை.’ உண்மையில், கி.பி.ஏழாம்நூற்றாண்டு வரை சமணமும் பௌத்தமும் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறந்த மதங்கள் ஆகும். கடைக்கோடிச் சிற்றூர் வரை அவை பரவி இருந்தன.”1

‘அறியப்படாத தமிழகம்’ என்னும் தம் சிறுநூலில் தமிழகம் அறிய வேண்டிய பல முக்கிய வரலாற்று, பண்பாட்டுச் செய்திகளை விவரிக்கும் தொ.ப வின் எழுத்துகளிலேயே இதனை அறியலாம். அது மட்டுமில்லை. தமிழ்ப் பண்பாட்டோடு இன்றும் இரண்டறக் கலந்து நிற்கும் சில பண்பாட்டு வழக்கங்களைப் பௌத்தத்திலிருந்து தமிழர்கள் பெற்றனர் என்பதும் கவனிக்கத்தக்கதாகும். துறவிகளுக்குச் செவ்வாடை என்பது பௌத்த மதம் தந்ததாகும். தலையினை மொட்டையடித்துக்கொள்வது, அரச மரத்தை வழிபடுவது, பட்டிமண்டபம் நடத்தி விவாதம் செய்வது என்பவையும் பௌத்தம் தமிழ்ப் பண்பாட்டுக்கு அளித்த கொடைகளாகும். இன்றும் தமிழ் மண்ணில் எல்லா மக்களாலும் இந்தப் பண்பாட்டு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்கக் காலம் மக்களாலும் மன்னர்களாலும் பௌத்தம் ஒரு மதமாக, வாழ்வியல் நெறியாகப் பின்பற்றப்பட்டது. குறிப்பாக, காப்பியக் காலத்தில் சமணமும் பௌத்தமும் எல்லோராலும் போற்றிப் பாராட்டப்பட்டது. பக்தி இயக்கங்களின் எழுச்சியால் அது வீழ்த்தப்பட்டது. இன்னொரு வகையில் சொல்வதென்றால், சமண, பௌத்த இயக்கங்களின் வீழ்ச்சியே பக்தி இயக்கத்தின் எழுச்சி. பல நூற்றாண்டுகள் கழித்து பௌத்தம் மீண்டும் தமிழ் மண்ணில் வெகுமக்களிடத்தில் முந்தைய காலத்தைப் போல நிறைவாகப் பரவவில்லையென்றாலும் ஓர் அறிவு இயக்கமாக எழுச்சி பெற்றது பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான். ஆல்காட், அயோத்திதாசர், சிங்கார வேலர், லட்சுமி நரசு, அப்பாத்துரை போன்றோர் அதற்காகப் பாடுபட்டனர்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!