1
பிரித்தலும் வேற்றுமை ஊட்டலும்
அன்புள்ள தூயா,
என் அப்பாவோட செய்கை எல்லாம் வித்தியாசமா இருக்கு. அவர் இப்படி செய்வார்னு நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கல. இப்பல்லாம் அவரப் பாக்கும்போது பயமா இருக்கு. நான் சொல்றத கேட்கறதுக்குக் கூட அவர் தயாராயில்ல.
என்ன நேருக்கு நேர் பாக்கறதுக்கே அவருக்கு அருவெருப்பா இருக்கற மாரி தெரியுது. அவரின் முகம் விசித்திரமா மாறிடுது. அவரு முன்னப்போல இல்ல. அவர புரிஞ்சிக்கவே முடியல. என்ன திட்டறதுக்கும் அடிக்கறதுக்கும் அவருதான் ஆளக் கூட்டிட்டு வந்தார்.
அன்னைக்கு என்ன சரமாரியா அடிச்சாங்க, அசிங்க அசிங்கமா திட்டுனாங்க, ஆனா எல்லாத்தையும் பாத்துக்கிட்டு அப்பா அமைதியாவே இருந்தாரு. இதுக்கு முன்னாடி அப்பாவ இப்படி பாத்ததேயில்ல. எனக்கு அது ஒருமாரி இருந்துச்சு. அதேபோல உன்னையும் அசிங்க அசிங்கமா திட்டினாங்க, அத என்னால கேக்கவே முடியல. மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. என்னச் சுத்தியே எல்லாரோட பார்வையும் இருந்துச்சு. வீட்டோரத்தில் ஒதுக்கி வச்ச தொடப்பக் கட்டையாட்டம் ஓரங்கட்டி வச்சிருந்தாங்க. இதுக்கு நடுவுல உன்ன பத்தின நெனப்பு மட்டுந்தான் தொணையா இருந்துச்சு. நீ இப்ப எங்க இருப்ப, என்ன பண்ணிட்டிருப்ப, இவங்க உன்னைய ஏதாவது செஞ்சிட்டாங்கன்னா… ஐயோ பயமா இருக்கே… மூச்சுவிடறதுக்கே கஷ்டமா இருக்குது, பதட்டமா பயமா இருக்குது, அழுதுகிட்டே இருக்கேன். அவங்கள மட்டும் பழி சொல்லி பயன் இல்ல. அவங்களோட நம்பிக்கைய ஒடச்சிட்டேன்னு நினைக்கிறாங்க.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then