நபரூண் பட்டாச்சாரியா ( 1948 – 2014 )
நவீன வங்க இலக்கியத்தில் புரட்சிகர அழகியலின் நடைமுறையாளர்களில் ஒருவர். இந்திய மக்கள் நாடகக் குழு (இப்டா) வைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரும் நடிகரும் நாடகாசிரியருமான பிஜோன் பட்டாச்சார்யா, 2012 இல் நோபெல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவரும் மகத்தான எழுத்தாளரும் செயல்பாட்டாளருமான மஹாஸ்வேதா தேவி இணையரின் ஒரே பிள்ளை. கல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். கவிஞராகவும் எழுத்தாளராகவும் செயலாற்றினார். ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின் வாழ்க்கையை எழுதினார். அவர்களுக்கான செயல்பாடுகளில் முன்னின்றார். சாகித்திய அகாதெமி விருது உள்ளிட்ட பல பெருமைகளும் பெற்றவர். எனினும் அதிகாரத்துக்கு எதிரானவராகவே இயங்கியவர். 2007 இல் தனக்கு அளிக்கப்பட்ட வங்க இலக்கியத்தின் மிக உயர்ந்த விருதான பங்கிம் விருதை அன்றைய இடதுசாரி அரசின் நந்திகிராம் வன்முறைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் மறுத்தவர். நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் ஆகிய எல்லாத் துறைகளிலும் பங்களித்தார். திரைப்படத் துறையிலும் கணிசமாகப் பங்காற்றினார். புற்று நோயுடன் நீண்ட நாட்கள் போராடி 2014 இல் மறைந்தார்.
கலவரத்தில் நேரடியாகப் பங்கேற்ற கும்பலில் சதாசிவ்வும் இருந்தான் என்று சொல்வது சரியில்லைதான். ஆனால் அவன் அந்தக் கும்பலில் இல்லை என்றும் எப்படிச் சொல்ல? அலுவலகம் செல்லும் பாபுக்களும் அவர்களது மனைவியரும்கூடக் காரில் வந்து கடைகளில் கொள்ளையடித்தார்கள்தானே? போலீசும் அந்தத் தீவைப்பில் சம்பந்தப்படாமல் இருந்தார்களா என்ன? சிக்கல் அங்கேதான். சுருக்கமாகச் சொன்னால் கலவரத்தில் பங்கெடுத்தவர்கள், பங்கெடுக்காதவர்கள் என்று பிரித்துப் பார்ப்பது கடினம். கலவரக்காரர்களில் ஒருவனாகச் சதாசிவ்வைச் சேர்த்தாலும் அவன் அவ்வளவு முக்கியமானவன் அல்ல என்றும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு அவன் அயல்வாசிகளைப்போல ஒரு திரிசூலத்தைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது அம்மா கேட்டாள்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then