நிஜமனிதர்களைப் போலவே சில கதாபாத்திரங்களும் நம்மோடு மிக நெருக்கமான உறவு கொண்டுவிடுகிறார்கள். அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.
தஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்கத் துவங்கிய நாட்களில் குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் ரஸ்கோல்னிகோவ் மறக்க முடியாத கதாபாத்திரமாக இருந்தான். காரணம் அவன் தொடர்ந்து மனசாட்சியோடு பேசுகிறான். ஒரு குற்றம் அவன் மனசாட்சியை விழித்துக்கொள்ளச் செய்கிறது. தனக்குத் தானே தண்டனையை விதித்துக்கொள்கிறான். கொலைகாரனைப் பற்றி நமக்குள் இருந்த பொதுப்புத்தியை ரஸ்கோல்னிகோவ் மாற்றிவிடுகிறான்.
கல்குதிரை இதழ் தயாரித்த தஸ்தாயெவ்ஸ்கி சிறப்பிதழில் கவிஞர் தேவதச்சன் தஸ்தாயெவ்ஸ்கிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் ரஸ்கோல்னிகோவினைத் தனது நண்பனாகக் கருதி அவனை ஒரு தேநீர் விருந்திற்கு அழைக்கிறார். நான் அறிந்தவரை ரஸ்கோல்னிகோவிற்கு எழுதப்பட்ட முதற்கடிதம் அதுவே. ஒரு தமிழ்க் கவிஞன் ரஷ்யக் கதாபாத்திரத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then