“யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு?” – அருந்ததி ராயின் பிரபல வரி. மாதொருபாகன் நாவலின் மையப்போக்கு அப்படிப்பட்டதுதான். சொல்லப்படும் காட்சிகள், நாம் உருவாக்கி வைத்திருக்கிற, நமக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கிற மனித வாழ்வு குறித்த புரிதல்கள், அந்தப் புரிதலினுள் இயங்கிக்கொண்டிருக்கும் கடிவாளக் கட்டமைப்புகளைக் கேள்விக்கு உட்படுத்துவதாகவே உள்ளன. இதன் காரணமாய் நாவலின் மையத்தை உட்செரித்தல் என்பது சிரமமான காரியமாக இருக்கலாம்.
“ஆட்டூர், திக்குத் தெரியாமல் போகும் அளவுக்குப் பெரிய ஊர் ஒன்றும் அல்ல. ஊர் என்னும் வளவிற்குள் இருபது வீடுகள். அதிலும் நான்கைந்து வீட்டார் காட்டுக்குள் குடியிருப்பார்கள். அதற்குப் பின்னால் ‘ஆள்க்கார வளவு’. அங்கே பத்துப் பதினைந்து குடும்பங்கள். இரண்டுக்கும் இடையே ஒரு காடு தூரம்.”
இந்தக் ‘கிராமப் பின்னணி’யில் பண்ணையார் சமூகச் சுழலோடு வாழும் பொன்னா, காளியின் குழந்தையில்லாத நிலையின் போக்குகள் நாவலின் மையம். நாவலின் பக்கங்களெல்லாம், திருமணமாகிப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகியும் தங்களுக்கென ஒரு குழந்தை இல்லையே எனும் சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும். “குட்டி ஈனும் கிடாரியைப் பார்க்கும்பொழுது, இந்த வாயில்லா ஜீவன் வாங்கி வந்த வரம் நான் வாங்கலயே” இப்படியாய் எந்தப் பேச்சும் செயலும் குழந்தை இல்லை என்பதிலேயே முடியும் பல நேரங்களில் கண்ணீருடன்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then