கனவில் வரும் கப்பல் இன்று கரை ஒதுங்கும் என்று தோன்றியது. காலை முதல் எப்படியாவது கண்டுவிட வேண்டும் என ஜன்னல் வழியாகக் கடலைப் பார்த்தபடி இருந்தார். பொழுது பெரும் சிரமத்துடன் கடந்து, ஒருவழியாக இரவு வந்தது. வானில் ஒரு நட்சத்திரம் கூடத் தென்படவில்லை. நிலா.? குடையை விரித்துக்கொண்டு கடலை நோக்கிக் கிளம்பினார்.
கடற்கரையில் குவிந்திருந்த கூட்டம் காற்றின் திசையில் திரும்பிக்கொண்டிருந்தது. காற்றின் திசை எதுவென மழைத்துளிகள் சொல்லிக்கொண்டிருக்கையில், குடை மேல்நோக்கி விரிந்து மடங்கி கைநழுவியது. சற்றுமுன்பு நின்றிருந்த பெருந்திரளில் ஒருவர் கூட இல்லை. சிறு நண்டுகள் மணலுக்கு அடியில் மறைந்தன. தூரத்தில் மீன்பிடிக்கச் சென்ற படகுகள் கரை திரும்பிக்கொண்டிருந்தன. வழக்கம்போல் இன்றும் ஏமாற்றம். கப்பல் எங்கே?
மழைச் சப்தம் நடுவில் யாரோ கதவைத் தட்டுவதுபோலிருந்தது. ஒருகணம் தலையை உயர்த்திவிட்டு மீண்டும் படுத்தார். ஆமாம், உண்மை தான். தட்டுகிறார்கள். திடுக்கிட்டுக் கதவை திறந்தார். மழையில் நனைந்த ஆமணக்குச் செடி ஒன்று புன்னகைத்தது. கம்புகளில் வெள்ளைநிற மாவு போன்று படிந்திருக்கும் இடங்களில் நீர் சொட்டியது. நீண்ட காம்புகளுடைய நீளமான இலையில் நீர்த்துளிகள் மின்னின.
“என்னை நினைவிருக்கிறதா? ஒருநாள் குடிசையின் முன் வெயிலில் நீங்கள் தவித்துக் கொண்டிருந்தபோது, நிழல் தர வந்திருந்தேன். அந்தக் கொடூர வெக்கையில் மரணத்தை விரும்பியதாகக் கூட என்னிடம் சொன்னீர்கள். கண்டிப்பாக என்னை உங்களால் மறக்க முடியாது என்று தெரியும். என்னோடு இருந்த ஒருநாள்தான் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்த நாள் என்று நம்புகிறேன்.” கண் இமைத்து ஆமோதித்தார். “உள்ளே வரலாமா?”
வீட்டைச் சுற்றிப் பார்த்து, “அடேங்கப்பா! தனியாக இவ்வளவு பெரிய பங்களாவில் வசிக்கிறீர்களா! நான் இன்றும் நீங்கள் அமைத்த அதே குடிசையின் அருகில்தான் வசிக்கிறேன்.” வயதானவர் திடுக்கிட்டார். உடனே ஆமணக்குச் செடி “நீங்கள் யோசிப்பது புரிகிறது, நான்தான் ஒரே நாளில் தோன்றி அந்தப் படுபாவி பூச்சியினால் அரிக்கப்பட்டு மடிந்துவிட்டேன் என்றுதானே? தெரியும், அந்தச் சம்பவத்தினால் மிகவும் கலங்கிப் போனீர்கள். என்னை அந்த நிலைமைக்கு ஆளாக்கிய பூச்சியையும், வெயிலையும் சபித்தீர்கள். அடுத்த மழையின்போது மறுபிறவி எடுத்தேன். அதற்குள் நீங்கள் என்னைவிட்டுச் சென்றுவிட்டீர்கள். நீங்கள் தனிமையில் மிகப்பெரும் துன்பத்தில் இருப்பதாகக் கனவு வந்தது. ஊர் மக்களுக்குப் பல நன்மைகள் செய்து குளிர்விக்கிறேன், உங்களைக் குளிர்விக்க மாட்டேனா?”
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then