துளியூண்டு கிள்ளு சரம் – பா.ராஜா

திருமணம் என்ற ஒன்று தனக்கு நடக்கும் என்ற நம்பிக்கையை முற்றிலுமாய் இழந்திருந்தான் சபரிவாசன். இருபத்தியேழாம் வயதில் ஜாதகத்தை கையில் எடுத்தனர் பெற்றோர். தற்போது முப்பத்தி எட்டு நடப்பாண்டு. பூஜை, பரிகாரம்,தோஷம் கழிக்க வாழை மரத்திற்குத் தாலி கட்டி வெட்டுவது என, இன்னும் என்னென்ன உள்ளனவோ அவை எல்லாவற்றையும் செய்து ஓய்ந்திருந்தான். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை. நல்ல சம்பளம். சொந்த வீடு. அவனுக்குப் பெண் அமையாதது குறித்து அவனிடமே பேசும் சிலர்,

“தம்பி உனக்குப் பொண்ணு கிடைக்கமாட்டேங்குதேன்னு நெனக்கிம்போது ஆச்சிரியமா இருக்கு! ஊருக்குள்ள பொறுக்கி, தறுதலைக்கெல்லாம் கல்யாணம், காட்சின்னு அமையுது, ஆனா உன்னய நெனச்சா கஷ்டமா இருக்குதுப்பா” என்பார்கள்.

அவனுடன் படித்த, நண்பர்கள் எல்லாம் குடும்பம், குழந்தை என இருப்பதைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு மனசுக்கு எப்படியோ இருக்கும். அதிலும் போன வாரம் ஒரு சம்பவம் அவனை மிகவும் மன ரீதியாகத் துன்புறுத்திவிட்டிருந்தது.

அவன் தேநீர்க்கடைக்குச் சென்றுகொண்டிருக்கும்போது, எதிரில் நண்பனொருவன் பைக்கில் தனது பிள்ளையை முன்னமர்த்திக்கொண்டு வந்தான். அவனருகில் வண்டியை நிறுத்தி, தனது குழந்தையை பைக்கில் இருந்தபடி, அப்படியே தூக்கிக்காட்டி “இங்கப்பார்றா” என்று ஒரேயொரு வார்த்தையை மட்டும் பேசிவிட்டுப் பிள்ளையை அவனிடம் காட்டிவிட்டுப் போயே, போய் விட்டான். சபரியால் அன்றைய நாளை முடிவிற்குக் கொண்டு வரவே முடியவில்லை.

காதல் போலான விஷயங்களில் பதின்பருவத்தின் மையத்திலிருந்தே அவனுக்கு ஆர்வமிருந்தாலும், அவன் எந்தப் பெண்ணைப் பார்த்து விரும்பி விருப்பத்தைத் தெரிவிக்க முயன்றாலும், அதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாக, அப்பெண்ணிற்கு வேறொருவருடன் காதலோ, அல்லது திருமணத்திற்கான நிச்சயதார்த்தமோ நடைபெற்றுவிடும்.

அது இப்போது திருமணத்திற்கு வரன் பார்க்கும்போதும், கூடவே ஒரு நிழல்போலப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவனது ஜாதகம், புகைப்படம், பயோடேட்டா, ஆகியவை வெளியில் சென்றால் உடனே வேறொரு மாப்பிள்ளையோடு அப்பெண்ணிற்குத் திருமணம் நிச்சயமாகிக் கொண்டிருந்தது.

சொந்தத்தில் எவ்வித நிகழ்விற்கும், விழாவிற்கும் அவன் செல்வதில்லை. சபையில் தான் பேசு பொருள் ஆவதோடில்லாமல், அதனைத் தானே கேட்கும்படியான துயர் படிந்த சூழலை அவன் விரும்புவதில்லை. சமூகம், பொதுவெளியில், உறவினர் மத்தியில் பேசு பொருளாவது உண்டாக்கும் துயரைவிட, இரவில் அவனுலகில், தனியறையில், தனித்திருந்து அவன் அனுபவிக்கும் துயரின் கொடுமை, அடர்த்தியும் ஆழமும் கொண்டதாக இருந்தது. எந்தவொரு பெண்ணுடலையும் சமீபித்திருக்காத அவனது உடல் இரவுகளில் எடை கூடிவிடும் விநோதம் நிரம்பிய ஒன்றாக மாறிவிட்டிருந்தது. அவனது நண்பனொருவன் தனக்குத் தெரிந்து ‘அந்த’ மாதிரி இடம் ஒன்று உள்ளது என ஆசையூட்டி அழைத்தபோதும் கூட, மனப்பூர்வமாய் இல்லாமல் வைத்துக்கொள்ளும் உறவு சவத்தைப் புணர்வது போன்றது என்று கூறி மறுத்து விட்டான். நேற்று நள்ளிரவு வரை தூக்கம் வராததால் போனில் எதையெதையோ நோண்டிக்கொண்டிருந்துவிட்டு, (எதையெதையோ என்று குறிப்பிடுவது அதைத்தான்!) தாமதமாய் உறங்கி, தாமதமாகவே எழுந்தான். இன்று ஞாயிற்றுக்கிழமை அவனுக்கு விடுமுறை.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!