4
இருபதாம் நூற்றாண்டில் நந்தனார் கீர்த்தனையை எடுத்தாண்டவர்களில் முதன்மையாகக் கூறப்பட வேண்டியவர் சுப்பிரமணிய பாரதியார் (1882 – 1921). கோபாலகிருஷ்ண பாரதியார், சுப்பிரமணிய பாரதியார் மீது பெரிய அளவில் தாக்கம் செலுத்தியிருக்கிறார். தனியே ஆராயும் அளவுக்குச் செய்திகள் உள்ள தலைப்பு இது. ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ பாரதி மீது தாக்கம் செலுத்தியது போலவே நவீன கால தளத்தில் நந்தனார் கீர்த்தனைக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கியதில் சுப்பிரமணிய பாரதிக்கும் பங்குண்டு. பாரதி தேசிய விடுதலை நோக்கிலான பாடல்களையும் இயற்றிவந்த நிலையில், அதற்கு நந்தனார் கதையாடல் கைகொடுத்தது. அக்கதையை வேறு விசயத்திற்கான குறியீடாக்கியும் வளர்த்தெடுக்க முடியும் என்பதை பாரதியாரே துவங்கி வைத்தார். தேசிய விடுதலை அரசியல் பரவிய காலத்தில் சமூக விடுதலை கருத்தோட்டங்களும் எழுந்தன. அவற்றைத் தேசிய விடுதலைச் சட்டகத்தில் உள்ளடக்கிப் பொருள்படுத்த வேண்டியிருந்தபோது பாரதிக்கு அதற்கான அடையாளமாக நந்தனாரே கிடைத்திருக்கிறார். பல இடங்களில் பாரதியின் சிந்தனை வடிவத்திற்கு நந்தனார் கீர்த்தனையே கைகொடுத்தது என்று கூட கூறலாம்.
பாரதிக்கு ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ எங்ஙனம் அறிமுகமானது, எங்கு கற்றார் என்பவை தெரியவில்லை. அவர் மீதான நந்தனார் கீர்த்தனையின் தாக்கம் இரண்டு வகைகளில் அமைந்திருந்தது. ஒன்று வடிவம், மற்றொன்று உள்ளடக்கம். அதாவது, பாரதியார் தம் பாடல்களை ராகம், மெட்டு சார்ந்து இயற்றியபோது ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ பாடல்களிலிருந்தே எடுத்தாண்டார். பாரதியார் பாடல்களைக் காலவரிசைப்படி தொகுத்த சீனி.விசுவநாதன் அத்தொகுப்பில் இதற்கான விரிவான குறிப்புகளைத் தந்திருக்கிறார்.
1) பாரதியாருடைய முதல் கவிதைத் தொகுப்பான ‘ஸ்வதேச கீதங்கள்’ (1908) நூலில், ‘ஸ்வராஜ்யம் வேண்டுமென்ற பாரதவாஸிக்கு ஆங்கிலேயே உத்தியோகஸ்தன் கூறுவது’ என்ற தலைப்பிலான பாடல் ‘நந்தனார் சரித்திர’த்திலுள்ள “மாடு தின்னும் புலையா – உனக்கு மார்கழித் திருநாளா?” என்ற பாட்டின் வர்ணமெட்டு என்று கூறுகிறார் சீனி.விசுவநாதன். அதாவது, நந்தனார் கீர்த்தனையில் சிதம்பரம் போவதற்கு நந்தனாருக்கு எத்தகைய தகுதிகளெல்லாம் கிடையாது என்று பண்ணை ஆண்டை கூறுகிறாரோ, அதேபோல் சுதந்திரம் கோரும் இந்தியரைப் பார்த்து அதைக் கேட்பதற்கு எத்தகைய தகுதிகௌல்லாம் உங்களுக்கு இல்லை என்று ஆங்கிலேயன் ஒருவன் கூறுவதாக இப்பாடல் எழுதப்பட்டுள்ளது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then