மொழியாக்கம் குறித்த நவீன வாசிப்புகள் பெரும்பாலும் பைபிள் வாசிப்புப் பிரச்சினையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக, கடவுளின் புத்தகத்தை மானுட மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யும் பிரச்சினையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது. மொழியாக்கத்தை இப்படிக் குறிப்பிட்ட முறையில் முன்வைப்பது, மொழியாக்கம் என்ற செயல்பாடு குறித்த நம்முடைய புரிதலில் தொடர்ந்து தாக்கம் செலுத்திவருகிறது. இது துரதிர்ஷ்டவசமானது; ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த வரையறை, ‘மூலம்’ என்று ஒன்று கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அதன் மொழியாக்கம் எப்போதும் நிறைவாக இருக்க முடியாது என்ற முன்தீர்மானத்தின் அடிப்படையிலானதாகவும் இருக்கிறது. மொழியாக்கம் எப்போதும் மூலத்துடன் ஒன்றிணைய முடியாது என்ற முறையிலேயே மூலம் என்பது வரையறுக்கப்படுகிறது. இந்த வரையறையில், மூலப் பிரதிக்கும் மொழியாக்கப் பிரதிக்கும் இடையே கடக்க முடியாத ஓர் இடைவெளி இருப்பதாகிறது. இந்த இடைவெளி தெய்வீகத்தன்மைக்கும் மானுடர்களுக்கும் இடையேயான இடைவெளியைப் போலிசெய்வதாகவும் இருக்கிறது. மூலம் என்பது அடைய முடியாத ஒன்றாகவும், தீண்ட முடியாத ஒன்றாகவும் ஆகிறது. மானுடர்கள் எவ்வளவுதான் தெய்வீகக் குணாம்சங்களுக்கு ஒத்துச் செயல்பட்டாலும் அவர்களால் கடவுளின் அந்தஸ்தை அடையவே முடியாது. (மனிதர்களுக்குள் கடவுள் இருக்கிறார் என்ற இந்து நம்பிக்கையைக் கொண்டு, மொழியாக்கத்தைப் புரிந்துகொள்ள வேறு சட்டகத்தைக் முன்வைக்க முடியும்!)
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then