சாதிய மாற்றங்களில் காட்டியதும் காட்டப்படாததும்
தமிழில் நட்பை/நண்பர்களை மையமாக வைத்துப் பல படங்கள் வந்துள்ளன. புனிதமானது எல்லா அடையாளங்களையும் தாண்டியது சாதி மதம் பார்க்காதது என்ற வழமையான அர்த்தங்கள் அதற்குண்டு. இதனால் சாதிமத அடையாளக் குறிப்புகள் இல்லாத பொதுவான நட்பு படங்களே அதிகம் வெளிவந்திருக்கிறது. ஒருவேளை சாதியைக் குறிப்பிடும்படியான நட்பு படங்கள் வந்திருக்குமானால், அது சாதியை மீறியும் நட்பு அமைய முடியும் என்பதைச் சொல்லுவதற்கான படங்களாகவே அவை இருக்கும். அவ்வகைப் படங்களில் சாதி தாண்டி அமையும் ‘மீறல்கள்’ எத்தகையவை என்பதையே இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம். குறிப்பாக 1990களின் படங்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
1994ஆம் ஆண்டு ‘பெரிய மருது’ படம் வெளியானது. தென்தமிழகத்தின் குறிப்பிட்டவோர் சாதி அடையாளத்தை தமிழ் சினிமாவில் ஒரு பிராண்டாக மாற்றியவர்களுள் ஒருவரான சங்கிலிமுருகன் தயாரித்து என்.கே.விஸ்வநாதன் இயக்கிய படம். நாயகனின் பெயர்தான் படத்தலைப்பானது. நாயகன் பெரிய மருது ஊரின் பணக்காரனான சிவசங்கரனின் அடியாள். தமிழ் சினிமா அகராதிப்படி நாயகன் அடியாளாக இருந்தாலும் நல்லவன். நண்பன் சிவசங்கரனுக்கு ஒரு பிரச்சனை என்றால் எத்தகைய மோதலிலும் கண்மூடித்தனமாக இறங்கக்கூடியவன். ஊரார், உறவினர் வருத்தப்பட்டாலும் கவலைப்பட மாட்டான். அதேவேளையில் அந்த முரட்டுத்தனம் அவன் நலனுக்கானது அல்ல, சிவசங்கரனின் நட்புக்கானது. இவ்வாறு அவனுடைய வன்முறைக்கொரு விதிவிலக்கைத் தருகிறது திரைப்பிரதி. பால்ய வயதில் தாய் தந்தையை இழந்து நின்ற பெரிய மருதுவின் வீரத்தைப் பார்த்து பணக்காரச் சிறுவனான சிவசங்கரன் அரவணைக்கிறான். அவனுடைய அரவணைப்புக்காக வாழ்நாள் முழுக்க விசுவாசமாக இருக்கிறான் பெரிய மருது. ஆனால் ஜமீன்தாரான சிவசங்கரன் மக்களைச் சுரண்டுகிறவன். அதற்காகப் பெரிய மருதுவின் வீரத்தைப் பயன்படுத்திக்கொள்கிறான். இந்த தந்திரத்தைப் புரிந்துகொள்ளாமல்தான் அவனுக்கு விசுவாசம் காட்டி வருகிறான் பெரிய மருது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then