செங்கல்பட்டு மாவட்டத்தின் பஞ்சமர்கள் குறித்து வெஸ்லியன் மிஷினரியான ஆடம் ஆண்ட்ரு என்பவர் எழுதிய ஆய்வுக்கட்டுரையில் இருந்த அரசியல் ரீதியான சிக்கல்களைக் களையும் பொருட்டே க்ரேவின் ஆய்வு உத்தரவிடப்பட்டது. அது குறித்த விசாரணைகள் 1616-இல் தொடங்கப்பட்டன.
குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களிலும் பஞ்சமர்களே பெருமளவு விவசாயக் கூலிகளாக இருந்த போதிலும், அவர்தம் வாழ்க்கை மிக மோசமான நிலையில் இருந்த போதிலும்அந்த ஆய்வு பஞ்சமர்கள் என்று குறிப்பிடாமல் பொதுவாக விவசாயக் கூலிகளைக் குறிப்பதாகவே அமைந்தது.
ஏன் வெளிப்படையாய்ப் பஞ்சமர்களின் வாழ்க்கை குறித்து எந்த ஆய்வும் செய்யப்படாமல், பொதுவாக விவசாயக் கூலிகளின் வாழ்வு என்ற அளவிலேயே அந்த ஆய்வு நடந்தது? இந்த விஷயத்தில் அரசு ஊழியர்கள் பஞ்சமர்கள் வாழ்க்கை நிலை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கு உதவ மறுத்தார்கள், அப்படியானதொரு முயற்சியே பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்ற சாக்குடன். பி.எஸ். சிவசாமி அய்யர் என்பவர் சொன்னது கீழ்வருமாறு:
…இப்படி ஒரு விசாரணைக் கமிஷன் ஏற்படுத்துவது என்பதே, பல்வேறு வகுப்பினரிடையே உரசல் ஏற்பட வாய்ப்பளிக்கும் என்று அஞ்சுகிறேன்; ஒரு வகுப்பினரிடம் அதிகப்படியான எதிர்பார்ப்புகளும், அதிகப்படியான அச்சங்களை மற்ற வகுப்பினரின் மனங்களில் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். அடிமட்ட வாழ்க்கைத்தரமும் ஆரோக்கியமற்ற வாழ்வு முறைகளும் பறையர் (பஞ்சமர்) தொழிலாளர்களுக்கு மட்டும்தான் உள்ளன என்பதில்லை.
நான் முன்பே குறிப்பிட்டது போல், இதுபோன்ற எதிர்ப்புக் கருத்துகள் பரவலாக எழுந்தன என்பதிலிருந்து பொதுவாக, சாதி வேறுபாடுகள் என்பது, இந்திய மேட்டுக்குடி மக்களுக்கு முதற்கண் ஒரு தர்மசங்கடமான விஷயம் என்பது புலனாகிறது. 11 தலித்களின் சாதி அடையாள வேறுபாடு, தேசியவாதிகளின் மிதவாதப் போக்கினாலும், அவர்களுக்கு நாணயமான துணை தேசிய மேட்டுக்குடி வர்க்கத்தினராலும் ஒரு ஒருங்கிணைந்த சமுதாயமாகவே பார்க்கப்பட்டு, குறைத்து மதிப்பிடப்பட்டு (பிற சாதி வேறுபாடுகளில் ஒன்றாகவும், காலப் போக்கில் இயல்பாய் மறைந்து விடக்கூடியதாகவும்) அல்லது `பஞ்சமர்களின் நிலை’ என்பது தனிப்பட்ட ஆய்வு செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை இல்லை என்பதாக ஒட்டுமொத்தமாகவும் இருட்டடிக்கப்பட்டது. ஆனால் இந்திய அரசு அதிகாரிகள் ‘விவசாய ஏழைகள்’ குறித்ததோர் ஆய்வை ஆதரித்தனர். அவர்களது நிலைப்பாடு, மதறாஸின் பெருந்திரளான தொழிலாளர்களில் பஞ்சமர்களின் எண்ணிக்கை பெரும்பங்கு வகிக்கப் போவதையும், அது துணை தேசிய அரசியலுக்கு இடையூறாக இல்லாதிருக்க ‘பஞ்சமர்களின்’ அடையாள வேறுபாட்டை நிராகரிப்பது எவ்வளவு அவசியம் என்பதற்கு முன்னறிவிப்பாக அமைந்தது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then