ஆலினா குடியிருப்பிற்குச் செல்லும் பற்றைகள் அடர்ந்த பாதையின் இருமருங்கிலுமுள்ள காட்டுப்புற்களில் புழுதி படர்ந்திருந்தது. யாரோ வாகனத்தில் வந்துபோயிருக்கிறார்கள் என்ற சந்தேகம் சிலோன் ராஜனுக்கு உறுதியானது. எதிர்பார்த்த ஆபத்து தானில்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்துவிட்டது என்று புழுதிவாசனை மூளையிலடித்தது. வீட்டை நோக்கி வேகமாக ஓடினான். இதயம் திடீரென்று அடிவயிற்றில் வீழ்ந்துவிட்டதைப் போலிருந்தது. சுற்றிவர எந்தச் சத்தங்களுமில்லை. அவன் ஓடும் சத்தம் மாத்திரம் காதுகளில் கேட்டபடியிருந்தது.
வீட்டுப்படலையைத் திறந்தபோது வெளிவிறாந்தையில் மகள் மொனோரா அழுதபடி நின்றுகொண்டிருந்தாள். எது நடைபெறக்கூடாது என்று அந்த வீட்டையே சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தானோ அது நடந்துவிட்டது. மனைவி நிமினியைக் கடத்திச் சென்றுவிட்டார்கள். அழுதபடி ஓடிவந்து அணைத்த மகளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ராஜனின் உதடுகள் நடுங்கியது. மகளுக்கு ஆறுதல் சொல்ல வலுவில்லாத அவன் குரல் முகத்தசைகளிலேயே இறுகி நின்றது. கோபமும் வெறுமையும் ஆற்றாமையும் கண்களை முட்டியது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then