மனதில் நிற்கும் கதை மாந்தர்கள் ஒருவரா இருவரா?
நான் நூலகத்தில் நுழைந்தது ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது. எங்கள் ஆரம்பப்பள்ளிக்கு எதிரேயே கிளைநூலகம் புதிதாக வந்ததும் லைப்ரரியனாக வந்தவர் பொன்னுத்தாய் டீச்சர் (லைப்ரரி டீச்சர் என்போம்). ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருப்பவர்கள் நர்ஸ் டீச்சர். படித்து வேலைபார்க்கும் பெண்கள் எல்லோருமே எங்களுக்கு அப்போது டீச்சர்கள்தாம். பொன்னுத்தாய் டீச்சர் எடுத்துக்கொடுத்து அப்போது நான் வாசித்த முதல் நாவல் ‘டப்பாச்சி’ என்கிற குழந்தைகளுக்கான நாவல். பிறக்கும்போதே தலையின் மேல்பகுதி மரக்கட்டை போல இருக்கும். அந்த டப்பாச்சி என்கின்ற பையனை ஒருபோதும் மறக்கவே முடியாது. அவன்தலையில் குட்டும் ஆசிரியர்கள் எல்லாம் வலி பொறுக்க முடியாமல் கதறும் காட்சிகள் அவ்வயதில் அத்தனை பேரானந்தத்தை அளித்தவை.
அந்த டப்பாச்சிதான் என் மனதில் பதிந்த முதல் கதை மாந்தன். அஞ்சாப்புப் படிக்கையில் ஒரு முழுப் புத்தகத்தையும் வாசித்த பெருமையும் பீற்றலும்தான் தொடர்ந்து வாசிக்க எனக்குத் தூண்டுதலாக இருந்தது. என் வாசிப்பு வரலாற்றைத் துவக்கி வைத்த அந்தப் பொன்னுத்தாய் டீச்சர் இப்போது இருக்கிறாரோ இல்லையோ. ஆனால் என் மனதில் ஒரு கதாநாயகியைப்போல ஒரு கதை மாந்தராகவே, அதே கர்லிங் தலைமுடியும் சிரிப்புமாக நிலைத்திருக்கிறார்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then