கீழ்வருவது தனது “The Buddha and his Dhamma” (புத்தரும் அவரது தம்மமும்) நூலில் அம்பேத்கர் அளிக்கும் விளக்கம்:
புத்தருக்கும் கடவுளுக்கும் எந்தப் பஞ்சாயத்தும் இல்லை. பக்தர்களின் நம்பிக்கையை அவமதிப்பதோ உணர்வுகளைப் புண்படுத்துவதோ அவரது நோக்கமல்ல. மாறாக கடவுள் நம்பிக்கையானது சாராம்சவாதத்தின் ஒரு பிரதான வெளிப்பாடு என புத்தர் புரிந்திருந்தார். இருப்பை சாராம்சமாக புரிந்து கொள்வதே மனிதனின் துக்கத்தின், அடிமைத்தனத்தின் பிரதான காரணம். மேலும், கடவுள் நம்பிக்கை மனிதன் தன் பொறுப்பை ஒரு மற்றமை (அப்பாலை உலகம், விதி, கடவுள்) மீது சுமத்தி விட்டுச் சுரணையற்று, தன் ஆற்றலில் செயல்பாட்டில் ஊக்கமின்றி திரியச் செய்கிறது. சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை மறுக்காமல், மாற்றியமைக்காமல் அதற்குள்ளாகவே ஒரு முன்னேற்றத்தை நாடினால் போதும் என அடிமை மனப்பான்மையை அது மக்களிடம் ஏற்படுத்துகிறது. பல மூடத்தனங்களை சம்பிரதாயங்கள், மரபான நம்பிக்கைகள் எனும் பெயரில், கடவுளின் பெயரில் அப்படியே ஏற்றுக் கொள்ளச் செய்கிறது. ஆகையால் கடவுள் எனும் புரட்டை அம்பலப்படுத்துவது அவசியம் என புத்தர் நினைத்தார்.
புத்தர் கோசல நாட்டில் தன் சீடர்களுடன் பயணிக்கும் போது அங்குள்ள மானஸ்கதா எனும் பிராமண கிராமத்தில் அகிரவதி எனும் நதியின் கரையில் உள்ள ஒரு மாஞ்சோலையில் தங்கினார் (பக்கங்கள் சு46-5பு). அப்போது அவரைத் தேடி வசேத்தா, பரத்வஜா எனும் இரு பிராமணர்கள் வந்தனர். அவர்கள் அவரிடம் சென்று தம்முடைய கடவுள் நம்பிக்கை என்னவெனக் கூறி அதை அவர் ஏற்றுக் கொள்வாரா எனக் கேட்டனர். முதலில், “ஆன்மீகத்தின் அனைத்துப் பாதைகளும், தேடல்களும் பிரம்மனிடமே சென்று முடிகின்றன. பிரம்மத்தை சென்றடையும் மனிதனுக்கே வீடுபேறு, புண்ணியம் கிடைக்கிறது” எனக் கூறினர்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then