பெண்ணுடல் மீதான வன்தாக்குதல்:
முஸ்லிம் பெண்களின் கலாச்சாரக் கூறுகளில் ஒன்றான ஹிஜாபைப் பள்ளி, கல்லூரிகளில் அணியத் தடை செய்யக் கோரி கலகத்தில் ஈடுபட்டவர்களும் தாக்கப்பட்டவர்களுமாக இருபுறமும் இளைஞர்கள் போராடிக்கொண்டிருக்க, தொடர்ந்து எழுந்த கண்டனக் குரல்களுக்கு நடுவே, ஊடகங்களில், அந்தக் கலாச்சாரச் சின்னத்தின் மதிப்பீடுகளை ஆய்வு செய்வதிலும் சீருடைத் திட்டத்தின் மாண்புகளைப் போதிப்பதிலும் பொதுச் சமூகமும் புத்திஜீவிகளும் முனைந்திருந்த அவலத்தை நாடு முழுவதுமிருக்கும் இஸ்லாமியச் சமூகம் மிகுந்த துயரத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறது.
ஆகஸ்ட்டு 1ஆம் தேதியை முஸ்லிம் பெண்களின் உரிமைகள் தினமாக அறிவித்ததைத் தொடர்ந்து ‘நாம் நம்முடைய முஸ்லிம் சகோதரிகளை ஒடுக்கும் முத்தலாக்கிலிருந்து விடுவித்தோம். அவர்களை முன்னேற விடாமல் தடுத்தார்கள். நம்முடைய அரசு முஸ்லிம் பெண்களின் பக்கமே நிற்கிறது’ என்று இஸ்லாமியப் பெண்களின் மீட்பராகத் தன்னை அறிவித்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் ஈடுபட்டிருந்த அதே நேரத்தில்தான், கர்நாடகாவின் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் பாவித்தலுக்கும் கல்வி கற்றலுக்கும் இடையே ஏதாவது ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயத்துக்கிடையில் இழுபட்டுக்கொண்டிருந்தார்கள். இந்தியாவைப் போன்ற மதச்சார்பற்ற குடியரசின் பிரஜைகளான முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமையான ஹிஜாப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நினைப்பவர்கள் யார், பெண்கள் உடுத்த வேண்டிய ஆடைகளைத் தீர்மானிப்பவர்கள் யார், ஒரு சிறுபான்மையினம் ஒடுக்கப்படுதலுக்கும் பிரிவினைவாதத்துக்கும் ஆளாகும்போது அவர்களுக்குச் சார்பாக நிற்காமல் பாதிக்கப்பட்டவர்களையே விசாரணைக்கு உட்படுத்தும் போக்கில் பொதுச்சமூகம் ஈடுபடுவதன் பின்னாலிருக்கும் அரசியல் என்ன?
‘பிற்போக்குத்தனமான’ பர்தாவிலிருந்து முஸ்லிம் பெண்களை விடுவித்துவிடத் துடித்துக்கொண்டிருப்பவர்கள் ஒருபுறமும் காவித்துண்டுகளை அணிந்த குழுவொன்று விரட்டிக்கொண்டு வரும்போது தன்னைச் சமநிலைப்படுத்திக் கொள்வதற்காக அவள் உச்சரித்த சொற்களில் அடிப்படைவாதத்தைக் கண்டுவிட்டதில் சீற்றம்கொண்டிருந்தவர்கள் இன்னொரு புறமுமாகச் சமூகம் இருவேறு முனைகளில் நின்று பாதிக்கப்பட்ட இனத்தையே குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவிட்டிருக்கும் நிலையில், இந்தப் பின்நவீன யுகத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றை விவாதிக்க வேண்டியது அவசியமாகிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then