வெதுவெதுப்பான ஈஸ்ட்டர் நள்ளிரவு பூசையில் இயேசுவின் பாத்திரத்தையேற்று அப்போஸ்தலர்கள் போல வேடமிட்ட இளைஞர்களின் பாதங்களைக் கழுவிக்கொண்டிருந்தார் பாதிரியார். லிண்டா எப்போதுமில்லாத தீவிரமான மனப் போராட்டத்திலிருந்தாள். ரிக்சா ஓட்டியின் வெதுவெதுப்பான மூச்சுக்காற்று அவளை சுற்றியலைந்துக்கொண்டிருந்தது. அவனது நினைவுகளைத் தள்ளி வைக்க படாதபாடுபட்டவள், பக்கத்தில் மண்டியிட்டிருந்த அண்ணன் மகள் ஸ்லெட்டா ஐசக்கை ஒருமுறை கூச்சத்துடன் உற்றுப்பார்த்தாள். அவள் கண்மூடி தீவிரமான மன்றாட்டில் இருந்தாள். ரிக்சா ஓட்டி இயேசு, ஆலயத்துக்கு நிச்சயம் வந்திருப்பானென்று அவளுக்குத் தோன்றியது. கட்டுப்படுத்த முடியாத மனதுடன் ஆண்களின் வரிசையில் அவன் இருக்கிறானாவென தேடினாள். கட்டுக்குள் அடங்காமல் கொந்தளிக்கும் மனதை ஒருமுகப்படுத்த கண்களை மூடியபோது… ஆணியிறங்கிய உள்ளங்கையிலிருந்து ரத்தம் பீய்ச்சியடிக்கிறது, கூரிய ஈட்டி விளாவைத் துளைக்க நீரும் ரத்தமும் தெறிக்கிறது, உயிரற்ற தலை வாதையின் முனுமுனுப்புகளுடன் தொங்குகிறது… மனத்திரையில் நிழலாடிய அந்த காட்சிகளை மேலும் காண முடியாமல் விழித்துக்கொண்ட லிண்டா, புதிதாக வண்ணம் தீட்டப்பட்ட பலி பீடத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் இயேசுவின் முகத்தைப் பார்த்தாள். ஈஸ்டர் பண்டிகையின் பலி நிறைவேறிக் கொண்டிருக்க… சாலையில் விசிலடித்தபடி கருங்குதிரையின் வலுவான துள்ளலுடன் ரிக்சா இழுத்துக்கொண்டு ஓடும் இயேசுவின் நினைவுகள் அவள்மீது பேரலையென மோதி திணறடித்தன.
அந்த ரிக்சாகாரன் ஏன் இத்தனை தூரம் என்னை அலைக்கழிக்கிறான், எதற்காக என் நெஞ்சில் இவ்வளவு குதியாட்டம் போடுகிறான். அவள் திரும்பத் திரும்ப தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள். நினைத்துப் பாரத்தால் அவளது உடல் நடுங்குகிறது, உணர்வுகளின் கொந்தளிப்பால் வெப்பமேறிய உடல் பதற்றமடைகிறது. அவன் நிச்சயம் வந்திருப்பான். தேவாலயத்துக்கு வெளியே போய் தேட நினைத்தாள்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then